மதுரை ஆதினத்தின் மேலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், ”மதுரை ஆதினத்துக்குச் சொந்தமாக மதுரை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நிலங்கள் உள்ளதாகவும், நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகேயுள்ள பன்னத்தெரு கிராமத்தில் உள்ள நிலத்தில் தங்களிடம் அனுமதி பெறாமலேயே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியில் அரசு ஈடுப்பட்டடிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பன்னத்தெரு பஞ்சாயத்து தலைவரிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லையென குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தங்களது நிலத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு இடைக்கால விதிப்பதோடு அதனை இடிக்க உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்த போது, நாகை மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகளை எதிர்மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் 22ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: ஒரு கால்டாக்ஸி டிரைவரின் ஒருநாள் வாழ்க்கை.. 4554 என்னும் தலைப்பில் படமாகிறது...