ETV Bharat / city

21 மாவட்டங்களில் சதமடித்த பெட்ரோல்! - petrol price in krishnagiri

தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களில் பெட்ரோல் நேற்று (ஜூன்.26) லிட்டர் ரூ.100 ரூபாயைத் தாண்டி விற்பனை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி, நீலகிரி, திருப்பத்தூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில், இன்று (ஜுன்.27) பெட்ரோல் விலை ரூ.101 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய பெட்ரோல் விலை, பெட்ரோல் விலை
21 மாவட்டங்களில் சதமடித்த பெட்ரோல்
author img

By

Published : Jun 27, 2021, 3:48 PM IST

Updated : Jun 27, 2021, 4:57 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்ட வருகிறது. போக்குவரத்து செலவு, வரிவிதிப்பு காரணமாக தமிழ்நாட்டில் முக்கிய மாவட்டங்களான சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர் என, ஒவ்வொரு மாவட்டத்திலும் பெட்ரோல் விலை மாறுபட்டு காணப்படுகிறது.

சென்னையில் இன்று

பெருந்தொற்றினால் ஏற்பட்ட பொது முடக்கத்தால் பொருளாதார ரீதியாக மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசியமான பெட்ரோல், டீசல் விலை உயர்வும் மக்களை பெருமளவில் பாதித்துள்ளது.

இந்நிலையில், தலைநகர் சென்னையில் இன்று (ஜூன். 27) ஒரு லிட்டர் பெட்ரோல் 99.10 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 93.23 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

21 மாவட்டங்கள்

கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலம், திருவாரூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், அரியலூர், கடலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பெட்ரோல் 100 ரூபாய்க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டது.

இதில், கிருஷ்ணகிரி, நீலகிரி, திருப்பத்தூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில், இன்று (ஜூன்.27) பெட்ரோல் விலை ரூ.101 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு பெட்ரோல் இலவசம்!

Last Updated : Jun 27, 2021, 4:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.