ETV Bharat / city

பெரியார் குறித்து அவதூறு பேச்சு - ரஜினி வீடு முற்றுகை - அவதூறு பேச்சு

சென்னை: துக்ளக் ஆண்டு விழாவில் தந்தை பெரியார் குறித்து அவதூறாகப் பேசியதாக, நடிகர் ரஜினிகாந்த்தின் வீட்டை முற்றுகையிட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்பட்டனர்.

protest
protest
author img

By

Published : Jan 21, 2020, 2:14 PM IST

தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் சென்னை போயஸ் கார்டன் அருகே இன்று நடைபெற்றது. அப்போது தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரை காவல் துறையினர் கைது செய்தனர்.

முன்னதாக, செய்தியாளர்களைச் சந்தித்த தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை ராமகிருட்டிணன், "கடந்த 14ஆம் தேதி துக்ளக் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரஜினிகாந்த் பேசியது பெரியாரைக் கொச்சைப்படுத்தும் செயல். அதற்கு ரஜினி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பதற்காகவே இந்தப் போராட்டம்.

காலை தனது இல்லத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ரஜினி, ஒரு ஆங்கிலப் பத்திரிகையைக் காட்டி சான்று கூறுகிறார். அவை எல்லாம் ஊர்வலத்தில் கொண்டுவரப்பட்ட புராணக்கதைகளை வைத்து வரையப்பட்ட ஓவியங்கள். ஆனால், நிர்வாணப் படங்களை ஊர்வலத்தில் எடுத்துவரவில்லை. பெரியார் ராமருக்கு எதிர் கருத்து கூறிவந்தவர்தான். ரஜினி இது மறுக்கக் கூடிய விஷயம் அல்ல, மறக்க வேண்டிய விஷயம் என்று கூறி இருக்கிறார். இந்த ஞானம் ஏன் அவருக்கு 14ஆம் தேதி வரவில்லை.

பெரியார் குறித்து அவதூறு பேச்சு - ரஜினி வீடு முற்றுகை

பெரியார் ஊர்வலமாக சென்றதைக் கண்டித்து 1971ஆம் ஆண்டு அரசு பெரியார் மீது வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அதனால் யாரும் புண்படவில்லை எனக்கூறி அவ்வழக்கைத் தள்ளுபடி செய்தது. இப்போது ரஜினி யாருடைய தூண்டுதலின் பெயரில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக தேவைப்பட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ‘சாரி... பெரியார் குறித்த கருத்திற்கு மன்னிப்பு கேட்க முடியாது’ - ரஜினி திட்டவட்டம்

Intro:Body:தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் சென்னை போயஸ் கார்டன் அருகே நடைபெற்றது. அப்போது தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 30 க்கும் மேற்பட்ட தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் காவல்துறையினர் கைது செய்தனர்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த தந்தை பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் கூறியதாவது:

"கடந்த 14ம் தேதி துக்ளக் பத்திரிகை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரஜினி பேசியது பெரியாரை கொச்சை படுத்தும் செயல். அந்த தவறான செயலை செய்த ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்த போராட்டம்.

காலை தனது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரஜினி , ஒரு ஆங்கில பத்திரிகை காட்டி சான்று கூறுகிறார். அது எல்லாம் பெரியார் புராணக்கதைகளை வைத்து வரையப்பட்ட ஓவியங்களை ஊர்வலமாக கொண்டுவந்தது.
பெரியார் ராமருக்கு எதிர் கருத்து வைத்து வந்தார். ஆனால் நிர்வாண படங்களை எடுத்துவரவில்லை. ரஜினி இது மறுக்க கூடிய விஷயம் அல்ல,மறக்க வேண்டிய விஷயம் என்று கூறி இருக்கிறார். இந்த ஞானம் ஏன் அவருக்கு 14ம் தேதி வரவில்லை.

பெரியார் ஊர்வலமாக சென்றதை கண்டித்து 71 ஆம் ஆண்டு அரசு பெரியார் மீது வழக்கு தொடர்ந்தது. இதனால் யாரும் புண்படவில்லை என நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. இப்போது ரஜினி யாருடைய துண்டுதலின் பெயரில் செயல் பட்டு கொண்டிருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக தேவைபட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்" என தெரிவித்தார் .

Conclusion:visual
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.