ETV Bharat / city

இதுவரை எத்தனை முறை பரோலில் வந்துள்ளார் பேரறிவாளன்?

ராஜிவ் காந்தி வழக்கில், 28 ஆண்டுகள் சிறையிலிருக்கும் பேரறிவாளனுக்கு மருத்துவக் காரணங்களுக்காக ஒரு மாத காலம் பரோல் வழங்கி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 19) உத்தரவிட்டுள்ளார்.

perarivalan Parole days, பேரறிவாளனின் பரோல்கள், எழுவர் விடுதலை, ராஜிவ் காந்தி கொலை வழக்கு, பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல், பேரறிவாளனுக்கு பரோல், பேரறிவாளனுக்கு எத்தனையாவது பரோல், perarivalan, 30 days parole for  perarivalan
perarivalan Parole days
author img

By

Published : May 19, 2021, 11:02 PM IST

காரணமே தெரியாமல், '9 வோல்ட் திறன் கொண்ட 2 கோல்டன் பவர் பேட்டரி'களை ஒற்றைக் கண் சிவராசனுக்கு வாங்கிக்கொடுத்தற்காக, 30ஆண்டுகள் சிறையிலிருந்து வருகிறார் பேரறிவாளன். இதுவரையிலான சிறைவாசத்தில் மூன்று முறை மட்டுமே அவர் பரோலில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

முதல் பரோல்

  • 1991ஆம் ஆண்டில், சிறு விசாரணை என அழைத்துச் செல்லப்பட்ட பேரறிவாளன், 26 ஆண்டுகள் கழித்து 2017இல்தான் சிறையிலிருந்து பரோலில் வெளியே வந்தார்.
  • 2017ஆம் ஆண்டு வேலூர் மத்திய சிறையில் இருந்த பேரறிவாளன், தனது தந்தை குயில்தாசனை காண பரோல் வேண்டி விண்ணப்பித்ததையடுத்து அதே ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் 24ஆம் தேதி அவருக்கு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரோல் வழங்கினார்.
  • அதன்பின்னர், சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டுவந்த பேரறிவாளனுக்கு சில கட்டுப்பாடுகளோடு கூடுதலாக ஒரு மாத காலம் பரோல் நீட்டிக்கப்பட்டது.
  • மொத்தம் இரண்டு மாதம் சிறைவிடுப்புக்கு பின்னர், அக்டோபர் 25ஆம் தேதி மீண்டும் சிறை சென்றார்.
    perarivalan Parole days, பேரறிவாளனின் பரோல்கள், எழுவர் விடுதலை, ராஜிவ் காந்தி கொலை வழக்கு, பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல், பேரறிவாளனுக்கு பரோல், பேரறிவாளனுக்கு எத்தனையாவது பரோல், perarivalan, 30 days parole for  perarivalan
    பேரறிவாளனின் பரோல்கள்

இரண்டாம் பரோல்

  • சீறுநீரகப் பிரச்சனையினாலும், மூட்டுவலியிலும் கடுமையாக அவதிப்பட்டு வந்த பேரறிவாளன், சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக, புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
  • அதன்பின்னர், 2019ஆம் ஆண்டு உடல்நலம் குன்றிய தனது தந்தையை பார்க்கவும், அக்காள் மகளின் திருமணத்தில் கலந்துகொள்ளவும், 30 நாள் பரோல் கேட்டு விண்ணப்பித்தார். அதைத்தொடர்ந்து, நவம்பர் 12ஆம் தேதி கடும் நிபந்தனைகளுடன் பரோலில் விடுவிக்கப்பட்டார்.
  • அதன்பின்னர், அவரது தந்தை உடல்நலத்தை கருத்தில்கொண்டு மேலும் 30 நாட்கள் பரோலை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
  • இந்த விடுப்பின்போதுதான், பேரறிவாளன் தனது அக்காள் மகள் கல்யாணத்தில் பறையடித்து நடனமாடிய காணொலி தமிழ் மக்களின் மனதை கனமாக்கியது.

மூன்றாம் பரோல்

  • சென்னை புழல் சிறையில் சிறுநீரக தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த பேரறிவாளனுக்கு, உடல்நிலையை கருத்தில்கொண்டு 90நாட்கள் பரோல் வழங்க அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த 2020ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
  • அவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வு அவருக்கு 30 நாட்கள் பரோல் வழங்கியது.

    குடும்பத்துடன் பேரறிவாளன்
  • 2020ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி பேரறிவாளன் விடுப்பில் வந்தார். தொடர் மருத்துவ சிகிச்சைக்காகவும் அவரின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டும், மேலும் இரண்டு வாரங்கள் பரோலை நீட்டிக்க சென்னை உயர் நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.
  • அதைத்தொடர்ந்து டிசம்பர் 7ஆம் தேதி அவர் சிறைக்கு திரும்பினார்.

எப்போது விடுதலை?

கடந்த முப்பது ஆண்டுகால சிறைவாசத்தில், சுமார் 164 நாட்களை மட்டுமே விடுப்பை பெற்றுள்ள பேரறிவாளனுக்கு, தற்போதைய மு.க. ஸ்டாலின் அரசு 30 நாட்கள் மீண்டும் பரோல் வழங்கியுள்ளது. இந்த அறிவிப்பிற்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நன்றி தெரிவித்துள்ளார்.

பேரறிவாளன்

மு.க.ஸ்டாலின் அரசு பொறுப்பேற்றதில் இருந்து பேரறிவாளன் உள்பட எழுவர் விடுதலைக் குறித்து மிகுந்த நம்பிக்கையில் உள்ளதாக அற்புதம்மாள் கூறிய நிலையில், தற்போதைய அறிவிப்புக்கு பிறகு எழுவரின் நிரந்தர விடுதலை குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: ’ஒரு தாயின் உணர்வுகளையும் கோரிக்கையையும் விரைந்து பரிசீலனை செய்ததற்கு நன்றி’ - அற்புதம்மாள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.