ETV Bharat / city

’’ பாஜகவுக்கு மக்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள்’’- பாலகிருஷ்ணன் பேட்டி - etv news

தமிழ்நாட்டில் நீட் தேர்வுகளை திணிக்கும் பாஜகவுக்கு மக்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள் எனவும்,திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

’’நீட் தேர்வுகளை திணிக்கும் பாஜகவுக்கு மக்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள்’’- பாலகிருஷ்ணன் பேட்டி

author img

By

Published : Mar 13, 2021, 9:02 PM IST

Updated : Mar 13, 2021, 9:45 PM IST

சென்னை தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ’மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திமுக கூட்டணியில் போட்டியிட உள்ள 6 வேட்பாளர்களை அறிவித்தார். நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டப்பேரவைத் தொகுதியில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் நாகை மாலியும், திருப்பரங்குன்றம் தொகுதியில் எஸ்.கே.பொன்னுத்தாய்யும், கோவில்பட்டியில் கே சீனிவாசனும், கந்தர்வகோட்டை தனித்தொகுதியில் எம் சின்னத்துரையும், அரூர் தனி தொகுதியில் ஏ.குமார் மற்றும் திண்டுக்கல் தொகுதியில் என்.பாண்டி ஆகியோரை வேட்பாளராக அறிவித்தார்.

மேலும், அதிமுக பாஜக கூட்டணி வருகிற சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடையும். திமுக தலைமையில் ஆட்சி அமையும். அடுத்த இரு தினங்களில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். தமிழ்நாட்டில் பரப்புரை செய்ய அகில இந்திய தலைவர்களாகன சீதாராம் யெச்சூரி, பிரகாஷ் காரத், பிருந்தா காரத், மாணிக் சர்க்கார் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் வரவிருக்கிறார்கள்.

’’நீட் தேர்வுகளை திணிக்கும் பாஜகவுக்கு மக்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள்’’- பாலகிருஷ்ணன் பேட்டி
மத்திய அரசு தமிழக மக்களின் கோரிக்கைகள் எதையும் கண்டு கொள்ளாமலும் எதிர்ப்பை கண்டகொள்ளாமலும் தொடர்ந்து அதன் எண்ணங்களை நிறைவேற்றி வருகிறது. நர்சிங் படிப்புகளுக்குக்கூட நீட் தேர்வை கொண்டு வந்துள்ள பாஜக முடிவுக்கு எதிராக தமிழ்நாட்டில் கொந்தளிப்பு நிலை எழுந்துள்ள நிலையில் இதற்கு தமிழ்நாடு மக்கள் உரிய பதிலடியை தேர்தல் நேரத்தில் அளிப்பார்கள். வழிபாட்டு தலங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக பாஜக இருக்கிறது” என்றார்.

இதையும் படிங்க: 1996 தேர்தல்! - மொடக்குறிச்சியால் விழி பிதுங்கிய தேர்தல் ஆணையம்!

Last Updated : Mar 13, 2021, 9:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.