ETV Bharat / city

மழைநீர் வடிகால்களில் கழிவுநீரை வெளியேற்றினால் அபராதம் -சென்னை மாநகராட்சி எச்சரிக்கை! - Penalty for discharging sewage into rainwater drains Chennai Corporation Warning

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்களில் கழிவுநீரை வெளியேற்றுவதை மக்கள் தவிர்க்க வேண்டும் எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

மழைநீர் வடிகால்களில் கழிவுநீரை வெளியேற்றினால் அபராதம் -சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!

author img

By

Published : Apr 21, 2022, 11:04 AM IST

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் துறையின் மூலம் 2071 கிமீ நீளமுள்ள 8835 மழைநீர் வடிகால் கட்டமைப்புகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த மழைநீர் வடிகால்களில் மழைநீர் தங்குதடையின்றி செல்லும் வகையில் மாநகராட்சியின் சார்பில் தூர்வாரப்பட்டு, பழுதடைந்த மழைநீர் வடிகால்கள் புனரமைக்கப்பட்டு தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், ஒரு சில இடங்களில் மழைநீர் வடிகால்களில் சட்ட விரோதமாக கழிவுநீர் இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மழைநீர் வடிகால்களில் மழைக்காலங்களில் மழைநீர் செல்வது தடைபட்டு நீர்த்தேக்கம் ஏற்படுகிறது. எனவே, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்களில் சட்ட விரோதமாக கழிவுநீரை வெளியேற்றும் குடியிருப்புகளுக்கு ரூ 5000 அபராதமும், நிறுவனங்களுக்கு ரூ 25000 அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் கடந்த 4 தேதி முதல் நேற்று வரை கள அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வுகளில் 105 சட்ட விரோத கழிவுநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டு அவற்றின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. மேலும் ரூ74500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மழைநீர் வடிகால்களில் கழிவுநீரை வெளியேற்றுவதைத் தவிர்க்க வேண்டும். மீறினால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிங்க:சென்னை உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் பெட்ரோல், டீசல் விலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.