இது தொடர்பாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது,
கரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், பொதுமக்கள் ஒன்றுக்கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்திவருகிறது. அதன்படி, பள்ளி - கல்லூரிகள், திரையரங்குகள், மால்கள், வணிக வளாகங்கள் ஆகியவை மார்ச் 31ஆம் தேதி வரை மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, சென்னை மெட்ரோ ரயில் சேவையும் மார்ச் 31ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, சென்னையில் உள்ள கோயம்பேடு, வடபழனி, வண்ணாரப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், சென்ட்ரல் உள்ளிட்ட அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்களை பயணிகள் எடுத்துச் செல்லமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வாகனங்களை அகற்றுவதற்காக மெட்ரோ ரயில் சேவை நிர்வாகிகள் இன்று ஒரு நாள் மட்டும் பணியில் ஈடுபடுவார்கள். எனவே, பயணிகள் அனைவரும் தங்களது வாகனங்களை எடுத்துச் சென்று மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று, ட்விட்டர் பதிவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 11, 12ஆம் வகுப்புத் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் - ஸ்டாலின்