ETV Bharat / city

திடீர் மழையால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதி - மழை

சென்னை புறநகா்ப் பகுதியில் இன்று (ஆக. 17) அதிகாலையில் இடி, மின்னல், காற்றுடன்பெய்த கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

திடீர் மழையால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதி

author img

By

Published : Aug 17, 2021, 11:09 PM IST

சென்னை: சென்னை புறநகா்ப் பகுதியில் இன்று அதிகாலையில் இடி, மின்னல், காற்றுடன்பெய்த கனமழையால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் மூன்று சா்வதேச விமானங்கள் உள்பட நான்கு விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூரு திருப்பி அனுப்பப்பட்டன.

விமானங்கள் தாமதம்

  • துபாயிலிருந்து 102 பயணிகளுடன் இன்று (ஆக. 17) அதிகாலை 2.40 மணிக்குவந்த எமரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானம்,
  • சாா்ஜாவிலிருந்து அதிகாலை 3.40 மணிக்கு 86 பயணிகளுடன் வந்த ஏா் அரேபியா விமானம்,
  • துபாயிலிருந்து 114 பயணிகளுடன் அதிகாலை 4 மணிக்கு வந்த ஃபிளையிங் துபாய் விமானம்

ஆகிய மூன்று விமானங்கள் சென்னை சா்வதேச விமான நிலையத்தில் மழை காரணமாக சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டன.

திடீர் மழையால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதி
திடீர் மழையால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதி

அதேபோல் பெங்களூருவிலிருந்து அதிகாலை 2 மணிக்கு 68 பயணிகளுடன் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்குவந்த ஸ்பைஸ்ஜெட் விமானம், சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கே திருப்பி அனுப்பப்பட்டது.

பயணிகள் அவதி

  • சென்னையிலிருந்து அதிகாலை 3.40 மணிக்கு தோகா செல்லவேண்டிய கத்தாா் ஏா்லைன்ஸ் விமானம்,
  • சென்னையிலிருந்து அதிகாலை 3.55 மணிக்கு குவைத் செல்லும் விமானம்,
  • சென்னையிலிருந்து அதிகாலை 4 மணிக்கு துபாய் செல்லும் விமானம்,

ஆகிய விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

  • சென்னையிலிருந்து அதிகாலை 4.20 மணிக்கு சாா்ஜா செல்லும் விமானம்,
  • சென்னையிலிருந்து அதிகாலை 4.55 மணிக்கு துபாய் செல்ல வேண்டிய விமானம்,

ஆகிய விமானங்கள் சுமாா் மூன்று மணி நேரம்வரை தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

மேலும், பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்ட நான்கு விமானங்களும், மழை ஓய்ந்த பின்பு இன்று (ஆக. 17) காலை 5.30 மணிக்குமேல் சென்னைக்கு திரும்பி வந்தன.

அதிகாலையில் பெய்த திடீா் மழையால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால், விமான நிலையத்தில் பயணிகள் கடும் அவதிக்குள்ளானாா்கள்.

இதையும் படிங்க: 'வட மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு!'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.