சென்னை: சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து அந்தமான் செல்ல இருந்த விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளிடம் கரோனா தொற்று இல்லை என்ற சான்றை அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
அப்போது சென்னையில் தனது சொந்த வேலைக்காக வந்த அந்தமானைச் சேர்ந்த பயணிக்கு கரோனா தொற்று இருப்பதாக குறுந்தகவல் வந்தது.
இதையடுத்து அவரது விமான பயணத்தை ரத்து செய்த விமான நிலைய அலுவலர்கள், தனிமைப்படுத்தி சுகாதார துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்தமான் செல்லவிருந்த பயணியை, கரோனா சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: Today Corono update: 12,895 பேருக்கு கரோனா தொற்று உறுதி!