ETV Bharat / city

இரண்டாவது திருமணம் செய்ய முயன்ற மகன் - மனமுடைந்த பெற்றோர் தற்கொலை - parents sucide

காஞ்சிபுரத்தில் இந்து பெண்ணை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற மகன், மீண்டும் கிறிஸ்துவ பெண்ணை காதலித்து திருமணம் செய்ய இருந்ததால், மனமுடைந்த இஸ்லாமிய பெற்றோர் குளிர்பானத்தில் விஷம் கலந்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மனமுடைந்த பெற்றோர்  தற்கொலை
மனமுடைந்த பெற்றோர் தற்கொலை
author img

By

Published : Jun 15, 2021, 12:27 PM IST

காஞ்சிபுரம் : சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் முகமது ஜலீல். (வயது 62) இவர் அதே பகுதியில் மனைவி மெகருன்னிசா (வயது 58) மற்றும் மாற்றுத்திறனாளி மகன் ஆசிக் மீரான் (வயது 35) ஆகியோருடன் வசித்து வந்தார்.

முகமது ஜலீல் கீழ்பாக்கம் மருத்துவமனையில் அரசு மனநல அலுவலராக பணிபுரிந்து 5 வருடத்துக்கு முன்பு ஓய்வு பெற்றார்.

மகன் ஆசிக் மீரான் அயனாவரத்தை சேர்ந்த சந்தியா தேவி என்ற இந்துமத பெண்ணை காதலித்து 2014 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை ஏதும் இல்லை. பின்னர் கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சந்தியா தேவி விவகாரத்து பெற்றார். இதனையடுத்து குடுமபத்தினருடன் காஞ்சிபுரம் மளிகை செட்டித் தெருவில் குடியேறினார் முகமது ஜலீல்.

காஞ்சிபுரத்தில் பிரபல சூப்பர் மார்க்கெட்டில் மேலாளராக பணிபுரியும் ஆசிக் மீரான், கிறிஸ்துவ நண்பனின் சகோதரி எலிசபெத் என்பவரை காதலித்து வருகிறார். அப்பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி 10 வயதில் மகள் உள்ளார். எலிசபெத்தை திருமணம் செய்து கொள்ளப்போவதாக பெற்றோரிடம் அவர் கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகனின் மனதை மாற்ற முயற்சித்து பெண் தேடும் படலத்தை துவக்கினர். இதை ஏற்றுக்கொள்ளாத ஆசிக் மீரான், பிடிவாதமாக எலிசபெத்தை திருமணம் செய்வதில் உறுதியாக இருந்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று பெற்றோருடன் சுமார் இரண்டு மணி நேரம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் ஒருவழியாக சமாதானமாகி மூன்று பேரும் குளிர்பானம் அருந்தியுள்ளனர்.

மேல்மாடியில் துணிகள் துவைத்து காயவைத்துவிட்டு வருகிறேன் என கூறி விட்டு ஆசிக் மீரான் மாடிக்கு சென்றுதூங்கி விட்டார். பின்னர் மாடியிலிருந்து கீழே இறங்கி வந்த ஆசிக் மீரான், பெற்றோரை எழுப்ப முயன்றபோது எந்தவிதமான சலனமும் இல்லாமல் இருவரும் இறந்து கிடந்தனர்.

இதைக்கண்டு அதிர்ச்சியுற்ற ஆசிக் மீரான், காவல்துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் சிவகாஞ்சி காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருமணமாகி 10 வயது மகளுடன் வசித்து வரும் பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த ஆசிக் மீரான் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர், அதே சமயம் மகன் மீது உள்ள பாசத்தின் காரணமாக தாங்கள் குடித்த குளிர்பானத்தில் மட்டும் விஷத்தை கலந்து தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.