ETV Bharat / city

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மோதல்: பின்னணியில் புதிய தகவல் - பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மோதல்

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கத்தி மற்றும் கற்களால் மோதிக் கொண்ட சம்பவத்தில் இன்ஸ்டாகிராம் ரீல் வீடியோவில் அசிங்கமாக கமெண்ட் செய்ததால், இரு வெவ்வேறு ரூட்டை சேர்ந்த மாணவர்கள் மோதியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மோதல்
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மோதல்
author img

By

Published : May 19, 2022, 6:57 AM IST

சென்னை: கடந்த 16 ஆம் தேதி சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஹாரிங்டன் ரோட்டில் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும் மாணவர்களான திருத்தணி ரூட்டை சேர்ந்த மாணவர்கள் சுமார் 60 பேரும், பூந்தமல்லி ரூட்டை சேர்ந்த மாணவர்கள் சுமார் 50 பேரும் இரு பிரிவுகளாக ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாணவர்கள் தாக்குதலுக்கு பயன்படுத்த இருந்த 8 பட்டாக் கத்திகள், காலி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த விவகாரம் தொடர்பாக கீழ்பாக்கம் போலீசார் ஆயுத தடைச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளில் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இது தொடர்பாக விசாரணை செய்ததில், பச்சையப்பன் கல்லூரி மாண்வர்களில் இரு வேறு ரூட்டுகளை சேர்ந்த மாணவர்கள் மோதிக்கொண்டது தெரிய வந்துள்ளது. போலீசாருக்கு கிடைத்த வீடியோக்கள் மற்றும் சிசிடிவி காட்சிகள் வைத்து விசாரணை செய்ததில் திருத்தணி "ரூட் தல" கிஷோர் குமார் மற்றும் பூந்தமல்லி "ரூட் தல" பிரேம் குமாரை போலீசார் கைது செய்தனர்.

இவர்களிடம் விசாரணை செய்ததில், பெரம்பூர் ரூட் வழியாக வரும் ரூட் தலைகள் மாரிமுத்து மற்றும் தமிழ் செல்வன் ஆகிய இரண்டு மாணவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

இருப்பினும் கத்தி போன்ற ஆயுதங்களை கொண்டு கடும் தாக்குதலுக்கு மாணவர்கள் முற்பட்டது ஏன் என போலீசார் விசாரணை செய்ததில், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோவில் அசிங்கமாக திட்டி கருத்து பதிவிட்டது தான் மாணவர்களின் மிகப்பெரிய மோதலுக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.

கைதான பெரம்பூர் ரூட்டைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பூந்தமல்லி ரூட்டை சேர்ந்த விக்னேஷ் என்பவரின் உடன்பிறந்த தம்பியும், பச்சையப்பன் கல்லூரியில் முதலாமாண்டு படித்துவருபவரின் இன்ஸ்டாகிராம் ரிலீஸில் கமெண்ட் பதிவில் அசிங்கமாக திட்டி பதிவிட்டுள்ளார்.

மாணவர் விக்னேஷ் மாரிமுத்துவிடம் அசிங்கமாக பேசி தகராறு செய்துள்ளார். இந்த வாக்குவாதம் தொடர்ந்து நாளுக்கு நாள் முற்றி வந்துள்ளது. கடந்த மே 6 ஆம் தேதி பச்சையப்பன் கல்லூரியில் கேண்டீனில் பூந்தமல்லி ரூட்டை சேர்ந்த விக்னேஷ், சூர்யா, அஜித் ஆகியோர் சிரித்துக்கொண்டு இருந்துள்ளதாக தெரிகிறது. அப்போது அங்கே வந்த பெரம்பூர் ரூட்டை சேர்ந்த மாரிமுத்து என்பவர் கடந்து சென்றுள்ளார்.

மேலும் தன்னை தான் கேலி செய்து சிரிப்பதாக நினைத்துக் கொண்டுள்ளார். இதனையடுத்து பெரம்பூர் ரூட் தல மாரிமுத்து நண்பர்களான திருத்தணி ரயில் ரூட்டை சேர்ந்த தமிழ்ச்செல்வன், கார்த்தி, அப்துல் ஆகியோரை அழைத்துக்கொண்டு கத்தியால் ,பூந்தமல்லி ரூட் தல மாணவர்கள் விக்னேஷ் மற்றும் நண்பர்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதில் அஜித் என்ற மாணவருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடம் செல்வதற்குள் சண்டையில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரும் தப்பி ஓடி விட்டனர்.

கல்லூரி வளாகத்துக்குள் நடந்த சம்பவத்திற்காக கல்லூரி நிர்வாகம் புகார் அளிக்காமல் அலட்சியமாக விட்டுள்ளனர். தொடர்ந்து பூந்தமல்லி, திருத்தணி மற்றும் பெரம்பூர் ரூட் வழியாக பச்சையப்பன் கல்லூரிக்கு வரும் மாணவர்கள் இடையே, கேலி செய்வதும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் தொடர்ந்து நடைபெற்று கொண்டே இருந்துள்ளது.

இந்நிலையில் வெவ்வேறு ரூட் வழியாக வரும் மாணவர்கள் பிரச்சனை தொடரவே நேற்று முன்தினம் திருத்தணி ரூட் மற்றும் பூந்தமல்லி ரூட் வழியாக வரும் மாணவர்கள், யார் பெரியவர்கள் என கத்தி மற்றும் கற்களைக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கி மோதிக்கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இன்ஸ்டாகிராம் வீடியோ ரூட் தல தம்பி வீடியோவிற்கு அசிங்கமாக திட்டி கருத்து பதிவிட்ட காரணம் மாணவர்களிடையே மிகப்பெரிய மோதலை உருவாக்கியுள்ளது. இதுவரை மொத்தம் 4 ரூட் தலைகள் கைது செய்யப்பட்ட நிலையில், தொடர்புடைய மற்ற மாணவர்களையும் கைது செய்யும் நடவடிக்கையில் கீழ்ப்பாக்கம் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் பட்டியலை தயாரித்து கல்லூரி நிர்வாகமும் கடுமையான நடவடிக்கை எடுக்க போலீசார் பரிந்துரை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: KGF பட பாணியில் போலீசாருக்கு மிரட்டல்... கைது செய்த சில மணிநேரத்தில் ஜாமீன்... கதறும் காவல் துறை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.