ETV Bharat / city

அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கம்- தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் தரப்பு கடிதம்!

அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்கிவிட்டு, இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கத்தை நியமித்துள்ளதாக தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் தரப்பினர் கடிதம் எழுதியுள்ளனர்.

OPS
OPS
author img

By

Published : Jul 30, 2022, 1:09 PM IST

சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் எழுந்ததன் எதிரொலியாக, கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து ஈபிஎஸ் தரப்பினர் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற முறையிலும், ஓபிஎஸ் தரப்பினர் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையிலும் ஒருவரையொருவர் மாறி மாறி கட்சியில் இருந்து நீக்கிக் கொண்டனர்.

ஏற்கனவே ஓபிஎஸ்-ஐ அதிமுகவில் இருந்து நீக்கியுள்ளதாக ஈபிஎஸ் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், தற்போது ஈபிஎஸ்-ஐ இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், எடப்பாடி பழனிசாமி உட்பட அவரது ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள், மாநில - மாவட்ட நிர்வாகிகள் என 50க்கும் மேற்பட்டோர் நீக்கப்பட்டுள்ளதாகவும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி நீக்கப்பட்ட நிலையில், வைத்திலிங்கத்தை அந்த பொறுப்பில் நியமித்துள்ளதாகவும், கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரை துணை ஒருங்கிணைப்பாளர்களாக நியமித்துள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓபிஎஸ்-ன் இந்த கடிதத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் ஈபிஎஸ் தரப்பிலும் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:வழியனுப்ப ஓபிஎஸ்... வரவேற்புக்கு ஈபிஎஸ்... மோடியின் 'ஆசிபெற்றவர்' யார்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.