ETV Bharat / city

'திமுக அரசே மக்கள் நலப் பணிகளில் கவனம் செலுத்து!' - எஸ்.பி. வேலுமணி

அதிமுக முன்னாள் அமைச்சர்களைக் குறி வைத்துப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். மக்கள் நலன் காக்கும் பணிகளில் கவனம் செலுத்துங்கள் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ops&eps
ops&eps
author img

By

Published : Aug 10, 2021, 1:45 PM IST

சென்னை: இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்குச் சொந்தமான இடங்களிலும், அவருக்கு நெருக்கமானர்களின் இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்திவருவதாக வரும் செய்திகளானது, திமுக அரசு மக்கள் நலப் பணிகளில் கவனம் செலுத்தாமல், பழிவாங்கும் நடவடிக்கைகளில் அக்கறை காட்டுகிறதோ என்ற ஐயப்பாடு ஏற்படும் வகையில் உள்ளது.

அதிமுகவின் துடிப்பான செயல்வீரர் வேலுமணி மீது அவதூறு பரப்பும் வகையில், திட்டமிட்டு பொய்க்குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுவந்த நிலையில், தற்போதைய சோதனை நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கவை.

கழகத்தின் முன்னாள் அமைச்சர் மீது சுமத்தப்படும் பொய்க்குற்றச்சாட்டுகள் அனைத்தையும் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சந்திக்கக் கழகம் எப்போதும் தயாராகவே உள்ளது. ஆனால், ஆதாரம் ஏதுவுமின்றி உண்மை என்ன என்பதைக் கண்டுபிடிக்கும் முன்னரே ஊழல் பழி சுமத்துவது நியாமற்றது.

இத்தகைய சோதனைகள் அனைத்தையும் தாங்கி நின்று, அதிமுக மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபடும். அன்பு வழியிலும் அற வழியிலும் அரசியல் தொண்டாற்றும்" எனத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: எஸ்.பி. வேலுமணி வீட்டில் சோதனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.