ETV Bharat / city

பாஜகவுடன் கூட்டணி: விளக்கமளித்த ஓபிஎஸ்; அப்செட்டில் சீனியர்கள்? - தம்பிதுரை

சென்னை: பாஜகவுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என ஓபிஎஸ் பேசியிருப்பதையடுத்து அதிமுகவின் சீனியர்கள் வருத்தத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

thambidurai
author img

By

Published : Feb 10, 2019, 10:23 AM IST

நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதால் தேசிய கட்சிகள் முதல் மாநில கட்சிகள் வரை அனைத்துக் கட்சிகளும் கூட்டணி விவகாரத்தில் முழு கவனத்தை செலுத்தி வருகின்றன.

திமுக - காங் - மதிமுக - விசிக - இடதுசாரிகள் இணைந்து தேர்தலை சந்திக்க அதிகளவில் வாய்ப்புகள் இருக்கின்றன. அதிமுகவோ, பாஜகவோ தங்களது கூட்டணி கணக்கை இன்னும் இறுதி செய்யாமல் வைத்திருக்கின்றன. ஆனால் அதிமுக - பாஜக - பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இணையும் என ஆரூடம் கூறப்படுகிறது. இருப்பினும் பாஜகவுடன் கூட்டணி வைக்க தம்பிதுரை, பொன்னையன் உள்ளிட்ட சீனியர்கள் விரும்பவில்லை என்ற தகவலும் உலா வருகிறது. மேலும், தொண்டர்கள் பலரும் பாஜகவுடனா... என 'உச்' கொட்டுகின்றனர்.

இந்நிலையில் தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என பேசியிருந்தார்.

அவரது இந்த பேச்சும், ஈபிஎஸ் - ஓபிஎஸ்ஸின் முடிவும் கட்சி சீனியர்களுக்கு பெரும் வருத்தம் அளித்திருப்பதாக கூறப்படுகிறது. எம்ஜிஆர் அதிமுகவை ஆரம்பித்த காலக்கட்டத்தில் இருந்தே தம்பிதுரை, பொன்னையன் உள்ளிட்டோர் அதிமுகவில் இருப்பவர்கள்.

குறிப்பாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரைதான் அதிமுகவில் இருக்கும் கடைசி திராவிட சித்தாந்தவாதியாக பலரால் பார்க்கப்படுகிறார். நாடாளுமன்றத்தில் 10% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக அவர் பேசிய பேச்சு அதனை நிரூபிக்கும் வகையிலேயே இருந்தது. பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் அதிமுகவுக்கு தமிழகத்தில் இருக்கும் கொஞ்சநஞ்ச செல்வாக்கும் கரைந்துவிடும் என்பது சீனியரான தம்பிதுரையின் கருத்து எனவும், ஆனால் அவரது கருத்துக்கு ஈபிஎஸ் - ஓபிஎஸ், அமைச்சர்கள் என யாரும் செவிமடுக்கவில்லை எனவும் அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

undefined

மேலும் பாஜகவுடன் கூட்டணி வைத்தால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் “மோடியா இல்லை இந்த லேடியா” என்று கோஷம் வைத்து 37 தொகுதிகளில் வென்ற ஜெயலலிதாவுக்கு செய்யும் மகா பாவம் என தம்பிதுரை உள்ளிட்ட சீனியர்கள் கூறியும் கட்சி தலைமை மதிக்கவில்லை என அவர்கள் கடும் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகின்றது.

இது இப்படி இருக்க, அதிமுகவை உருவாக்கிய எம்ஜிஆரும், தன்னிச்சையாக பல முடிவுகளை எடுத்த ஜெயலலிதாவும் சில முக்கிய முடிவுகளை சீனியர்களுடன் கலந்தாலோசித்தே எடுப்பார்கள். ஆனால் அதிமுகவில் தற்போது சீனியர்கள் மதிக்கப்படுவதே இல்லை. “நான் இறந்தாலும் 100 வருடங்களுக்கு அதிமுக நிலைத்து இருக்கும்” என்று ஜெயலலிதா சட்டப்பேரவையில் ஒருமுறை முழங்கினார். ஆனால் தற்போது இருக்கும் ஈபிஎஸ் - ஓபிஎஸ், சீனியர்களின் கருத்தை கவனத்தில் கொள்ளாமல் பாஜகவுடன் கூட்டணி அமைத்தால், அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அதிமுக உயிரோடு இருக்காது என ரத்தத்தின் ரத்தங்கள் முணுமுணுக்க தொடங்கியிருக்கிறார்கள்.

Intro:Body:

body

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.