சென்னை: தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன் இதே மருத்துவமனையில் குடல் இறக்கத்திற்கான அறுவை சிகிச்சை செய்துகொண்ட பழனிசாமி, இது தொடர்பான பரிசோதனைக்காக மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார்.
![எடப்பாடி பழனிசாமி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13414687_eps.png)
மேலும், அவருக்கு எண்டோஸ்கோபி சிகிச்சை செய்யப்படுவதாகவும், அவர் இன்று மதியமே வீடு திரும்புவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: திமுகவின் 100 நாள் சாதனை விலைவாசி உயர்வு தான் - ஈபிஎஸ் குற்றச்சாட்டு