ETV Bharat / city

வெங்காயம் பதுக்கலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை - செல்லூர் ராஜூ

சென்னை: வெங்காய விலை தொடர்ந்து அதிகரித்தால் நியாய விலை கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

price
price
author img

By

Published : Oct 21, 2020, 11:57 AM IST

ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆகிய மாநிலங்களில் தொடர் கனமழை காரணமாக தமிழ்நாட்டில் வெங்காயத்தின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் சந்தைகளில் வெங்காயத்தின் விலை கிலோ 100 ரூபாய்க்கு மேல் உயர்ந்தது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் நேற்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முக்கிய முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, இன்று முதல் பொதுமக்களுக்கு கூட்டுறவுத்துறையின் சார்பில், சென்னை உள்பட மாநகர பகுதிகளில் இயங்கும் பண்ணைப் பசுமை கடைகளில், வெங்காயம் ஒரு கிலோ 45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு நபருக்கு இரண்டு கிலோ வெங்காயம் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதனால் காலை முதலே பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வெங்காயத்தை வாங்கிச் சென்றனர்.

வெங்காயம் கிலோ 45 ரூபாய் மட்டுமே!
வெங்காயம் கிலோ 45 ரூபாய் மட்டுமே!

தோனாம்பேட்டையில் உள்ள பண்ணை பசுமை கடையில் வெங்காய விற்பனையை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, “ பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதால் மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு, பண்ணை பசுமை கடைகளில் மலிவு விலைக்கு விற்கப்படுகிறது. தேவைப்படும் பட்சத்தில் நியாய விலை கடைகளிலும் விற்பனை செய்யப்படும்.

தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 10 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயம் தேவைப்படுகிறது. ஜனவரி மாதத்தில் இருந்து வெங்காயம் விலை குறைய வாய்ப்பிருக்கிறது. திமுக ஆட்சி காலத்திலும் வெங்காயம் விலை 100 ரூபாய் வரை விற்கப்பட்டது. ஆனால் அதனை கட்டுப்படுத்த அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வெங்காய பதுக்கலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சின்ன வெங்காயம் விலை அதிகரித்தால் அதனையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் ” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு முதலமைச்சர் மரியாதை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.