ETV Bharat / city

ஆவடியில் விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு - ஆவடி செய்சிகள்

ஆவடி அருகே தனியார் குடியிருப்பில் விஷவாயு தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

AVADI SEPTIC TANK POISONOUS GAS ATTACK
AVADI SEPTIC TANK POISONOUS GAS ATTACK
author img

By

Published : May 6, 2022, 10:31 AM IST

சென்னை: ஆவடி அடுத்த பருத்திப்பட்டு நிரஞ்சன் நகரில் ஆப்டிமா தனியார் குடியிருப்பு உள்ளது. இங்கு சுமார் 118-க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு குணசேகரன் மற்றும் ஆவடி பருத்திப்பட்டு தர்மராஜா நகரை சேர்ந்த முத்து என்பவரும் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இன்று (மே 6) காலை குடியிருப்பில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு இரண்டு பேரும் வந்துள்ளனர்.

அப்போது, ஒரு தொட்டியில் முதலாவதாக முத்து இறங்கியுள்ளார். சிறிது நேரத்தில் முத்துவின் அலறல் சத்தம் கேட்டு குணசேகரன் முத்துவை கைப்பிடித்து மேல தூக்க வந்துள்ளார். ஆனால் விஷ வாயு தாக்கியதால் இருவரும் மயக்கமடைந்தனர். இதனையடுத்து, குடியிருப்புவாசிகள் உடனடியாக ஆவடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர், கழிவுநீர் தொட்டியில் மயக்க நிலையில் இருந்த முத்து மற்றும் குணசேகரன் ஆகியோரை மீட்டனர். இதில், முத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் தீயணைப்புத் துறையினர், குணசேகரனை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: மனைவி, குழந்தையை ஆட்டோவில் தீ வைத்து எரித்து இளைஞர் தற்கொலை - கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.