இந்தியாவின் எல்லைகளை ரேடார் கருவி மூலம் கண்காணிப்பதற்காகவும், பாதுகாப்பை அதிகரிக்கும் வகையிலும் ரிசார்ட் 2பி செயற்கைக்கோளை இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ உருவாக்கியுள்ளது.
இந்த செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி 46 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் மே 22ஆம் தேதி அன்று காலை 5.27 மணிக்கு ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படவுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
