ETV Bharat / city

தமிழ்நாட்டில் தற்போது 120 பேருக்கு ஒமைக்ரான் தொற்று - தமிழ்நாட்டில் 120 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று

தமிழ்நாட்டில் தற்போது மொத்தமாக 120 நபர்களுக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது எனவும், கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து 1,115 நபர்களுக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது எனவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.

Omicron virus infection in 120 people in Tamil Nadu on December 31

author img

By

Published : Dec 31, 2021, 9:16 PM IST

சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை டிசம்பர் 31ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், 'தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 414 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 1,144 நபர்களுக்கும், ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து வந்த ஏழு நபர்களுக்கும்,கத்தார், இலங்கை, ஓமன், மேற்கு வங்காளம் ஆகிய நாடுகளில் இருந்து வந்த தலா ஒரு நபர்களுக்கும் என 1,155 நபர்களுக்குப் புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 5 கோடியே 65 லட்சத்து 4 ஆயிரத்து 639 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 27 லட்சத்து 48 ஆயிரத்து 45 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது கண்டறியப்பட்டது.

மேலும் அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 7,470 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் குணமடைந்த 603 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் சேர்த்து சிகிச்சைப் பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27 லட்சத்து 3ஆயிரத்து 799 என உயர்ந்துள்ளது. மேலும் தனியார் மருத்துவமனையில் 3 நோயாளிகளும் அரசு மருத்துவமனையில் 8 நோயாளிகளும் என 11 நோயாளிகள் இறந்துள்ளனர். இதன்மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 36ஆயிரத்து 776 என உயர்ந்துள்ளது.

ஒமைக்ரான் பாதிப்பு:

வெளிநாடுகளிலிருந்து வந்த 22 ஆயிரத்து 418 நபர்களில் பரிசோதனை செய்தபோது 232 நபர்களுக்குக் கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டது. இவர்களில் மரபணுமாற்றம் ஏற்பட்டு எஸ் ஜுன் டிராப் 152 நபர்களுக்குக் கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஏற்கெனவே 43 நபர்களுக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு இருந்த நிலையில், மேலும் புதிதாக 97 நபர்களுக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 120ஆக உயர்ந்துள்ளது. மேலும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகளில் 66 பேர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது மேலும் 52 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

புதுச்சேரி மற்றும் கேரளாவில் இருந்து தமிழ்நாடு வந்த இரண்டு நபர்களுக்கும் ஒமைக்ரான் கரோனா வைரஸ் தொற்றுப்பாதிப்பு பதிவாகியுள்ளது.

செங்கல்பட்டில் ஐந்து நபர்களுக்கும், சென்னையில் 95 நபர்களுக்கும், மதுரையில் 4 நபர்களுக்கும், திருவள்ளூரில் மூன்று நபர்களுக்கும், கன்னியாகுமரி மற்றும் திருவண்ணாமலையில் தலா இரண்டு நபர்களுக்கும், சேலம், திருவாரூர், கோயம்புத்தூர் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு நபர்களுக்கும் 118 பேர் ஒமைக்ரான் தொற்றால் இதுவரை தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் கரோனா வைரஸ் தொற்றுப் புதிதாக 589 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 137 நபர்களுக்கும் கோயம்புத்தூரில் 70 நபர்களுக்கும் என அதிக அளவில் பாதிப்பு தெரிய வந்துள்ளது.

தமிழ்நாட்டில் தொடர்ந்து வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு அரசு கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: NEET Coaching Centerஇல் படித்த 34 பேருக்குக் கரோனா

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.