ETV Bharat / city

'திமுக செயற்கையாக வெற்றி பெற்றிருக்கிறது' ஓபிஎஸ் - ops on urban local body election results

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக செயற்கையான வெற்றியை பெற்றிருக்கிறது. இந்தத் தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற்றிருந்தால் அதிமுக வெற்றியை பெற்றிருக்கும் எனப் பதிவிட்டுள்ளார்.

o-panneerselvam-tweet-on-urban-local-bodies-election

author img

By

Published : Feb 22, 2022, 5:30 PM IST

சென்னை: இதுகுறித்து ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்நல் முடிவுகள் எதிர்பார்த்த ஒன்றுதான். இந்தத் தேர்தலில் ஆளும்கட்சி செயற்கையான வெற்றியை பெற்று இருக்கிறது. இந்தத் தேர்தல் நூறு விழுக்காடு சுதந்திராகவும், நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற்றிருந்தால் அதிமுக மகத்தான வெற்றியை பெற்றிருக்கும்.

அவ்வாறு நடைபெறவில்லை என்பது தூதிர்ஷ்டவசமானது. நடந்து முடிந்த தேர்தல் என்பது முழுமையான மக்கள் எண்ணத்தின் பிரதிபலிப்பு அல்ல, 'மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என்ற அண்ணாவின் பொன்மொழிக்கேற்ப மக்களின் தீர்ப்பிற்கு அதிமுக தலை வணங்குகிறது.

இந்தத் தருணத்தில் அனைத்திந்திய அண்ணர் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், அதன் தோழமை கட்சிகளுக்கும் வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு எனது நன்றியினை தெரிவிந்துக் கொள்கிறேன். அதிமுக இதற்கு முன்பு கூட பல தோல்விகளை சந்தித்தாலும், அவற்றிலிருந்து மீண்டு வந்து மகத்தான வெற்றிகளை படைத்து இருக்கிறது.

"தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும் மறுபடியும் தர்மமே வெல்லும்" என்பதை மெய்ப்பிக்கும் வகையில் மக்களின் உண்மையான நிலையையும், விருப்பத்தையும் வெளிப்படுத்துவதற்கான ஜனநாயக ரீதியான வாய்ப்பு விரைவில் அமையும். அந்த நன்னாள் வரும்போது மக்கள் சக்தி வெல்லும். மக்களின் விருப்பப்படி அதிமுக மீண்டும் வெற்றி பெறும். இது நிச்சயம் நடக்கும்.

அதிமுக எந்தவிதமான தொய்வும் இன்றி எப்போதும் போல் கழகப் பணியை மேற்கொள்ள வேண்டுமென்றும், மக்கள் தொண்டு ஆற்ற வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் தந்துள்ள அங்கீகாரம் இது - முதலமைச்சர் ஸ்டாலின்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.