தமிழ்நாடு சட்டப்பேரவை வரும் ஜனவரி 6ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கவுள்ளது. அதைத்தொடர்ந்து மார்ச் மாதம் முதல் வாரத்தில் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நிதிநிலை அறிக்கை தயாரிப்பது குறித்து தமிழ்நாடு துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் சண்முகம், நிதித்துறைச் செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட அனைத்துத்துறை முதன்மைச் செயலர்களுடன் தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார்.
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் குறித்தும், தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் செலவினங்கள் குறித்தும் அப்போது ஆலோசிக்கப்பட்டது. நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படவுள்ள புதிய திட்டங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: தமிழ்நாடு முதலிடம்? தினகரனின் கேலி ட்வீட்!