ETV Bharat / city

ஆண் என நினைத்து பெண் காவலரிடம் வம்பு செய்து உதை வாங்கிய போதை ஆசாமிகள்!

நடிகர் விவேக் பட காமெடி போல ஆண் போல இருந்த பெண் உதவி ஆய்வாளர் தோளில் கை போட்டு ஆபாசமாக ரகளையில் ஈடுபட்ட மதுபோதை கும்பலை போலீசார் கைது செய்தனர்.

ஆண் என நினைத்து பெண் காவலரிடம் ஒரண்டை இழுத்து உதை வாங்கிய  போதை ஆசாமிகள்!

author img

By

Published : Apr 21, 2022, 7:03 AM IST

சென்னை:சென்னையில் உள்ள ஒரு மகளிர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் பெண் உதவி ஆய்வாளர் ஒருவர் சார்ட் ஹேர் ஸ்டைலில் முடி வெட்டியுள்ளார். அந்த பெண் உதவி ஆய்வாளர் நேற்று ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டிசர்ட் உடையில் தனது தோழியுடன் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்குச் சாப்பிடச் சென்றார்.

சாப்பிட்ட பின்பு நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலை அருகே உள்ள தள்ளுவண்டி கடையில் மோர் குடித்துள்ளார். அப்போது அங்கு மதுபோதையில் நின்றிருந்த 3 வாலிபர்கள், பின்புறமாகத் திரும்பி மோர் குடித்து வந்த பெண் உதவி ஆய்வாளர் தோளின் மீது கை போட்டு, இவனை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறது எனக் கூறியுள்ளனர். உடனே திரும்பித் தான் பெண் எனவும், காவல் உதவி ஆய்வாளராக இருந்து வருவதாகவும் அவர்களிடம் தெரிவித்துள்ளார்.

அதற்கு பெண் என நம்புவதற்கான ஒரு தகுதியும் உன்னிடம் இல்லை எனவும் உதவி ஆய்வாளர் என எப்படி நம்புவது என கிண்டலடித்து உள்ளனர். மேலும் பெண் உதவி ஆய்வாளரின் உடலமைப்பை ஆபாசமாக வர்ணித்தும், கேலி கிண்டலும் செய்து வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பெண் உதவி ஆய்வாளர் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அளித்தார்.

அதன் பேரில் நுங்கம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பெண் உதவி ஆய்வாளரிடம் ரகளையில் ஈடுபட்ட மூன்று போதை ஆசாமிகளையும் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் தேனாம்பேட்டை சேர்ந்த செல்வகுமார், கல்லூரி மாணவர் நரேஷ், மந்தைவெளி சேர்ந்த விக்னேஷ், ஆகிய மூவரும் ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் போதையில் பெண் என்றே தெரியாமல் பெண் உதவி ஆய்வாளரிடம் ரகளையில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

வழக்கு :"காதல் கிசு கிசு" என்ற தமிழ்த் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் விவேக் போக்குவரத்து விதிகளை மீறியதாக காவல்துறையிடம் சிக்குவார். அப்போது ஆண் போல இருக்கும் பெண் காவல்துறைக்கு லஞ்சம் கொடுப்பது போலச் சிக்கிக் கொண்டு கதறுவார். இதுபோன்ற சம்பவம் தான் இது என காவல்துறையினர் சிலர் கூறுகின்றனர். கைதான 3 பேர் மீது பெண் வன்கொடுமை சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

இதையும் படிங்க:உள்ளாடையில் வைத்து கடத்தி வந்த 1 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல் - சுங்கத்துறை நடவடிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.