ETV Bharat / city

சென்னையில் முகக்கவசம் அணிவோரின் எண்ணிக்கை குறைவு - ஆய்வில் தகவல் - முக கவசம் அணிவோரின் எண்ணிக்கை

சென்னையில் 40 விழுக்காட்டிற்கும் குறைவான நபர்கள் மட்டுமே முகக்கவசம் அணிகின்றனர் என ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது.

Mask
Mask
author img

By

Published : Nov 25, 2021, 1:01 PM IST

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு முந்தைய வார இறுதி நாள்களில் சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 75 இடங்களில் ஆறாயிரத்து 130 தனி நபர்களிடம் ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் கீழ்காணும் தரவுகள் தற்போது தெரியவந்துள்ளன.

தெருக்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்ற குடிசைப் பகுதிகள் அருகிலுள்ள வெளிப்புற பொது இடங்களில் 32 விழுக்காட்டினர் சரியாக முகக்கவசம் அணிகிறார்கள். மற்ற வெளிப்புற பொது இடங்களில் 35 விழுக்காட்டினர் சரியாக முகக்கவசம் அணிகிறார்கள்.

மளிகைக் கடைகள், மருந்துக் கடைகள், வழிபாட்டுத் தலங்கள் போன்ற உள்புற பொது இடங்கள், குடிசைப் பகுதிகளில் 14 விழுக்காட்டினரும் - மற்ற இடங்களில் 21 விழுக்காட்டினரும் முகக்கவசம் அணிகிறார்கள். வணிக வளாகங்களுக்கு வரும் மக்களில் 57 விழுக்காட்டினர் மட்டுமே முகக்கவசம் அணிந்துவருகிறார்கள். மற்றவர்கள் அணிவதில்லை எனவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

கரோனா இரண்டாவது அலை ஏற்பட்டதும் முகக்கவசம் அணியும் பழக்கம் பொதுமக்கள் மத்தியில் பரவலாகத் தென்பட்டாலும் போகப்போக அது குறைந்துவிட்டதாகத் தெரியவந்துள்ளது.

சென்னையின் மொத்த மக்கள் தொகையில் 54 விழுக்காட்டினர் மட்டுமே தற்போது இரண்டு தவணை தடுப்பூசிகளையும் எடுத்துக்கொண்டுள்ள நிலையில், பொது இடங்கள், கூட்ட நெரிசல் அதிகமுள்ள இடங்களில் முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: முக கவசம் அணியவில்லை என்றால் அபராதம் - ரயில்வே நீட்டிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.