ETV Bharat / city

நெய்வேலி நிலக்கரி நிறுவனப் பங்கு ஈவுத்தொகை ரூ.7 கோடி முதலமைச்சரிடம் வழங்கப்பட்டது!

சென்னை: 2019-20ஆம் ஆண்டிற்கான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்கு ஈவுத் தொகையான 7 கோடியே 22 லட்சத்து 5 ஆயிரத்து 386 ரூபாய்க்கான காசோலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இன்று வழங்கப்பட்டது.

cm meet
cm meet
author img

By

Published : Nov 12, 2020, 5:31 PM IST

தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தரமணி, ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சிப்பூங்கா பேராசிரியர்.அசோக் ஜுன்ஜுன்வாலா சந்தித்து, ஐஐடி வளாகத்தில் ஆராய்ச்சிப் பூங்கா அமைக்க அரசு அளித்த நிலத்திற்கான குத்தகை தொகையாக, 1 கோடியே 25 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

தொடர்ந்து, மற்றொரு நிகழ்வில் முதலமைச்சரை, நீர்வளப்பாதுகாப்பு மற்றும் மேலாண்மையில் 2019-20 ஆம் ஆண்டிற்கான சிறந்த மாநிலமாக மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகத்தால் தமிழ்நாடு தேர்வு பெற்று, தேசிய நீர் விருது பெற்றதையொட்டி, பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

முதலமைச்சரை சந்தித்த ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சிப்பூங்கா குழுவினர்

மேலும், முதலமைச்சர் பழனிசாமியை இன்று நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் நிறுவனத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராகேஷ் குமார் சந்தித்து, 2019-20 ஆம் ஆண்டிற்கான நெய்வேலி நிலக்கரி நிறுவனப்பங்கு ஈவுத் தொகையான, 7 கோடியே 22 லட்சத்து 5 ஆயிரத்து 386 ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். இந்நிகழ்வுகளில் தலைமைச் செயலாளர் சண்முகம் உடனிருந்தார்.

இதையும் படிங்க: மத்திய, மாநில அரசுகளின் உறவை மேம்படுத்த ஆலோசனைக் கூட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.