ETV Bharat / city

மாசடைந்த நொய்யல் ஆறு! விவசாயிகள் இழப்பீடு பெற அனுமதி! - நொய்யல் ஆறு

சென்னை: சாயப்பட்டறை கழிவுகளால் மாசடைந்த நொய்யல் ஆற்றை ஒட்டிய மாவட்டங்களைச் சேர்ந்த 28 ஆயிரம் விவசாயிகளுக்கு 127 கோடி ரூபாய் இழப்பீட்டை வழங்க உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

noyyal
noyyal
author img

By

Published : Feb 24, 2021, 7:29 PM IST

திருப்பூர் மாவட்டத்தில் ஏராளமான பின்னலாடை மற்றும் சாயப்பட்டறை கழிவுகளால் நொய்யல் ஆறு மாசடைந்து, திருப்பூர், கரூர், ஈரோடு, கோயம்புத்தூர் மாவட்டங்களில் விவசாய நிலங்கள் பாழடைந்தன. இது தொடர்பாக கடந்த 1996 முதல் தொடரப்பட்ட பொதுநல வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆலை உரிமையாளர்கள் 25 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டுமென கடந்த 2003 ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

அதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்த நிலையில், உயர் நீதிமன்ற வங்கிக் கணக்கில் 25 கோடி ரூபாய் செலுத்தப்பட்டது. அது தவிர அபராதமாக வசூலிக்கப்பட்ட 42.02 கோடி ரூபாய், இழப்பீடாக வசூலிக்கப்பட்ட 7.64 கோடி ரூபாய், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வசம் இருத்தது. தமிழக அரசும் இழப்பீடாக 75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பித்தது.

விவசாயிகளுக்கு வழங்க ஒதுக்கப்பட்ட இத்தொகைகள் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை எனவும், பாதிக்கப்பட்ட 29 ஆயிரத்து 956 விவசாயிகளுக்கும் இழப்பீடு கிடைக்கச் செய்யக்கோரி கரூர் மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, உயர் நீதிமன்ற வங்கிக்கணக்கில் உள்ள 25 கோடி ரூபாயை தமிழக அரசுக்கு மாற்ற உத்தரவிட்டது. இழப்பீடு கோரியுள்ள அனைவரது மனுவையும் பரீசலித்து, தகுதியான நபர்களுக்கு, வரும் மே மாதம் 31ம் தேதிக்குள் இழப்பீடு வழங்கி, அதன் விவரங்களை நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூன் 8 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதன் மூலம் சாயப்பட்டறை கழிவுகளால் மாசடைந்த நொய்யல் ஆற்றை ஒட்டிய திருப்பூர், கரூர், ஈரோடு, கோயம்புத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த 28 ஆயிரம் விவசாயிகளுக்கு 127 கோடி ரூபாய் இழப்பீடு பிரித்தளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஓமலூர் - மெச்செரி ரயில்வே நிலையங்களுக்கு இடையில் உள்ள ரயில் தடங்களில் சோதனை ஓட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.