நிவர் புயல் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்துவருகிறது. அதன்படி கடலோர மாவட்டங்களில் பேருந்து சேவை, ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் நாளை(நவ.25) அரசு விடுமுறை விடப்படுகிறது என அறிவித்தார்.
தற்போது அதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதில், நாளை அரசு அலுவலகங்கள் அனைத்தும் மூடப்படும் என்றும் அத்தியாவசிய தேவைக்கான பணிகள் மட்டும் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் நாளை கடலோர மாவட்டங்களில் கரையை கடக்க உள்ளது. அதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் அதிதீவிர கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: நிவர் புயல் பாதிப்பை எதிர்கொள்ள இந்தியக் கப்பல் படை தயார்!