புதுச்சேரி மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், 'பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டும் பகல் 12 மணிவரை காய்கறி, மளிகை, இறைச்சிக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மருந்தகம் தவிர, அனைத்து கடைகளும் 12 மணிக்கு மேல் மூடப்பட வேண்டும். பொதுமக்கள் வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு தவிர்த்தால் மட்டுமே நோய்த் தொற்றைத் தடுக்க முடியும்' எனத் தெரிவித்தார்.
'மேலும் நோய்த் தொற்றால் பாதித்தவர்கள் மருத்துவமனை செல்லும்போது, அங்குள்ள நிரம்பி உள்ள படுக்கைகள் மற்றும் காலியாக உள்ள படுக்கைகள் குறித்து மருத்துவமனை முன்பு விவரங்கள் அடங்கிய பலகைகள் வைக்கப்படும்' என்றார்.
இதையும் படிங்க : ஊரடங்கு கால கட்டத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் ஒரு நல்வாய்ப்பு