சென்னை வியாசர்பாடி பெரியார் நகரை சேர்ந்தவர் பிரபாகரன்(27). இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சான் பிளாஸ்டிங் என்ற தனியார் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் பிரபாகரன் நேற்று நிறுவனத்திற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த அவரது தந்தை ஆனந்தன், பிரபாகரனை தேடி நிறுவனத்திற்கு சென்று பார்த்த போது நிறுவனம் பூட்டியிருந்தது.
இதில் சந்தேகமடைந்த அவர், கதவை உடைத்து உள்ளே சென்ற பார்த்த போது, பிரபாகரன் படுகாயங்களுடன் இறந்து கிடந்தார். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆனந்தன், உடனே இது குறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், பிரபாகரன் தனது நிறுவனத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு வடமாநில தொழிலாளர்களை பணியமர்த்தியும், தற்போது அவர்கள் இருவரும் மாயமாகி இருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் பிரபாகரனிந் செல்போனும் மாயமாகியிருப்பதால் இந்த கொலையில் வடமாநில தொழிலாளர்கள் தான் பணத்திற்கு ஆசைப்பட்டு கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:
பேருந்து - கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு!