ETV Bharat / city

‘வழக்கத்தைவிட அதிகமாக பெய்த வடகிழக்கு பருவமழை’ - புவியரசன்

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை இம்முறை 39 செ.மீட்டராக பதிவாகியுள்ளது என்றும் அதாவது இயல்பைவிட 2 செ.மீ அதிகமாக மழை பதிவாகி உள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.

‘வழக்கத்தை விட அதிகமாக பெய்த வடகிழக்கு பருவமழை’ - புவியரசன்

author img

By

Published : Dec 5, 2020, 2:49 PM IST

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “இந்த ஆண்டு வட கிழக்கு பருவமழை இயல்பைவிட 2 செ.மீ. அதிகமாக பதிவாகியுள்ளது. சராசரியாக 38 செ.மீ. இருக்க வேண்டிய மழை இந்த ஆண்டு 39 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை இயல்பான மழை 66 சென்டிமீட்டர், இம்முறை 96 சென்டிமீட்டர் மழை கிடைத்துள்ளது. இயல்பை விட குறைவான மழை நீலகிரி, சேலம், நாமக்கல், திருச்சி ஆகிய பகுதிகளில் பெய்துள்ளது.

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில நீடிக்கக்கூடும். இதன் காரணமாக இன்று (டிச. 5) கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை (டிச. 6) ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும் சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு மிதமான மழையும், அவ்வப்போது ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக (சென்டிமீட்டரில்) கொத்தவச்சேரி (கடலூர்) 19 செ.மீ. மழை பதிவாகியுள்ளது “ என தெரிவித்தார்.

மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரை, “இன்று (டிச. 5) குமரிக்கடல் மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இன்றும் (டிச. 5), நாளையும் (டிச. 6) கேரள கடலோர பகுதி, லட்சத்தீவு , மாலத்தீவு பகுதிகளிலும், நாளை மறுநாள் (டிச. 7) கேரள கடலோர பகுதி, தென் கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு , மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்கு செல்லவேண்டாம். அரபிக்கடல் பகுதிகளில் நாளை (டிச. 6) சுழற்சி ஒன்று உருவாக உள்ளது. அது புயலாக மாற வாய்ப்பு இல்லை. அதனால், அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பது வரும் நாட்களில் தெரியும்” என்றார்.

இதையும் படிங்க...விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு கோரும் ராகுல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.