சென்னை முகப்பேரைச் சேர்ந்தவர் கோபி. செப்டம்பர் 2ஆம் தேதியன்று இரவு இவர் வீட்டிலிருந்த போது, அங்கு வந்த முத்துப்பாண்டி என்ற நபர் அவரின் மகன் குறித்து தகராறு செய்ததாகவும் அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அப்போது அவருடன் இருந்த அவரது மகள் ஜோதி, அவரை அழைத்துக் கொண்டு, நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை வாங்க மறுத்த காவல்துறையினர் ஜோதியை காலையில் வந்து புகார் தருமாறு கூறியுள்ளனர்.
அப்போது முத்துபாண்டியை கைது செய்யுமாறு வலியுறுத்திய ஜோதியை பணியிலிருந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் லூர்து மேரி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஜோதி தனது வீட்டுக்குச் சென்று, உடலில் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அவரை அக்கம்பத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனிடையே புகாரளிக்கச் சென்ற தன்னை பெண் காவல் அலுவலர் அவமானப்படுத்தியதாலேயே தற்கொலைக்கு முயன்றதாக, ஜோதி வாக்கு மூலம் அளித்துள்ளார். அதன்படி நொளம்பூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ஜோதி தாக்கப்பட்டதாக கூறும் நேரத்தில் பணியிலிருந்த காவலர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே ஜோதியின் தந்தையை தாக்கியதாகக் கூறப்படும் முத்துப்பாண்டியையும் கைது செய்துள்ளனர்.
இதையும் படியுங்க:
போதையில் மகள்களை ஆற்றில் வீசிய தந்தை! மகள் மாயமானதால் தாய் தற்கொலை முயற்சி!
புற்றுநோயாளிகளுக்காக தனது கெட்டப்பையே மாற்றிக் கொண்ட பெண் காவல்துறை அதிகாரி!