ETV Bharat / city

தமிழ்நாடு அரசுக்கு நோபல் வெற்றியாளர் பாராட்டு

சென்னை: நோபல் பரிசு வென்ற எஸ்தர் டஃப்லோ தமிழ்நாடு அரசை வெகுவாகப் பாரட்டியுள்ளார்.

Nobel prize
author img

By

Published : Oct 15, 2019, 11:33 PM IST

Updated : Oct 16, 2019, 2:12 PM IST

நோபல் பரிசு

உலக வறுமையை ஒழிக்க புதுமையான முறைகளை கையாண்டதற்காக இந்திய அமெரிக்கரான அபிஜித் பானர்ஜி, அவரது மனைவி எஸ்தர் டஃப்லோ, மைக்கேல் கிரெம்மர் ஆகிய மூவருக்கு இந்த ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அபிஜித் பானர்ஜி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பிறந்தவர். அமெரிக்கா- ஃபிரான்ஸ் பொருளாதார பேராசிரியையான எஸ்தர் டஃப்லோ, இளம் வயதில் நோபல் பரிசு பெற்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற இரண்டாவது பெண்ணும் இவரே. இவருக்கும் தமிழ்நாட்டிற்கும் 2013ஆம் ஆண்டு முதலே தொடர்பு இருந்துள்ளது.

எஸ்தரும் தமிழ்நாடும்

அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற எம்.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவரும் எஸ்தர், வறுமை ஒழிப்பு மற்றும் மேம்பாட்டு பொருளாதாரம் (டெவலப்மென்ட் எகனாமிக்ஸ்) குறித்து பல ஆண்டுகளாக ஆய்வு செய்துவருகிறார். இந்த நிலையில், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் வறுமை ஒழிப்புத் திட்டங்களை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழ்நாட்டில் வறுமையை ஒழிக்க, தமிழ்நாடு அரசு அப்துல் லத்தீஃப் ஜமீல்- பாவர்ட்டி ஆக்ஷன் லேப் (J- PAL) என்னும் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து செயல்பட்டுவருகிறது. 2014 நவம்பர் மாதம் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அப்போதைய முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம், ஜே- பால் அமைப்பின் பிரிதிநிதிகளுடன் எஸ்தர் டஃப்லோவும் கலந்துகொண்டார்.

Nobel winner Esther Duflo appreciate Tamilnadu
அப்போதைய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான கூட்டத்தில் அபிஜித் பானர்ஜி மனைவி எஸ்தர் டூஃப்ளோ கலந்து கொண்டு பேசிய போது எடுத்த படம்.

பாராட்டு
அப்போது அவர் தமிழ்நாடு அரசின் செயலை வியந்து பாராட்டியுள்ளார். இது தொடர்பாக பேசுகையில், "வறுமையை ஒழிக்க புதுமையான முறைகளைக் கண்டுபிடிக்க தனது அலுவலர்களையும் பிறரையும் சவால் நிறைந்த பணிகளை செய்ய நிர்ப்பந்திக்கும் தமிழ்நாடு அரசின் முனைப்பு தங்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

வளர்ச்சிக்கு தடையாக உள்ள பிரச்னைகளுக்குப் புதுமையான முயற்சிகளைக் கண்டறியும் அரசின் பாரம்பரியத்தின் நீட்சியே இது" என்று பாராட்டியுள்ளார்.

தமிழகத்தில் ஆய்வு

தமிழ்நாட்டில் உள்ள மூத்த குடிமக்களின் வாழ்க்கைத் தரம், பொருளாதார நிலை ஆகியவை குறித்து எஸ்தர் டஃப்லோ அபிஜித் பானர்ஜி தம்பதி விரிவான ஆய்வு மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நோபல் பரிசு வெற்றியாளர் அபிஜித் தாயார் பேட்டி

Intro:சென்னை: வறுமையை தீர்க்க தமிழக அரசு எடுக்கும் புதுமையான முயற்சிகள் தங்களை வெகுவாக கவர்ந்துள்ளதாக பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டூஃப்ளோ கடந்த 2014 ஆண்டு கூறியுள்ளார். Body:2019 பொருளாதார நோபல் பரிசு

உலக வறுமையைப் ஒழிக்க புதுமையான முறைகளை கையாண்டதற்காக இந்திய அமெரிக்கரான அபிஜித் பேனர்ஜி, அவரது மனைவி எஸ்தர் டூஃப்ளோ மற்றும் மைக்கேல் கிரெம்மர் ஆகிய மூவருக்கு இந்த ஆண்டுக்கான பொருளாதாரத நோபல் பரிசு வழங்கப்பட்டதுள்ளது. அபிஜித் பேனர்ஜியை இந்தியாவில் பிறந்தவர். அமெரிக்க- பிரென்ச் பொருளாதார பேராசிரியையான எஸ்தர் டூஃப்ளோ, இளம் வயதில் நோபல் பரிசு பெற்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற இரண்டாவது பெண்ணும் இவரே. இவருக்கும் தமிழகத்திற்கும் ஒரு கடந்த 2013 ஆம் ஆண்டு முதலே தொடர்பு இருந்துள்ளது.

எஸ்தரும் தமிழ்நாடும்...

அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற எம்.ஐ.டி பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் எஸ்தர், வறுமை ஒழிப்பு மற்றும் மேம்பாட்டு பொருளாதாரம் (டெவலெப்மெண்ட் எகனாமிக்ஸ்) குறித்து பல ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறார். தமிழகத்தில் செயல்படுத்தப்படும் வறுமை ஒழிப்புத் திட்டங்ககளில் ஆராய்ச்சியுடன் கூடிய அறிவியல் பூர்வமான முடிவுகளை எடுக்கும் நோக்கில், தமிழக அரசு அப்தூல் லத்தீஃப் ஜமீல்- பாவர்ட்டி ஆக்ஷன் லேப் (J- PAL) எனும் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. கடந்த 2014 நவம்பர் மாதம் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சில் அப்போதைய முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் மற்றும் ஜே- பால் அமைப்பின் பிரிதிநிதிகளுடன் எஸ்தர் டூஃப்ளோவும் கலந்துகொண்டார். அப்போது அவர் தமிழக அரசின் செயலை வியந்து பாராட்டியுள்ளார். இது தொடர்பாக பேசுகையில், "வறுமையை ஒழிக்க புதுமையான முறைகளைக் கண்டுபிடிக்க தனது அதிகாரிகளையும் பிறரையும் சவால் நிறைந்த பணிகளை செய்ய நிர்பந்திக்கும் தமிழக அரசின் முனைப்பு தங்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. வளர்ச்சிக்கு தடையாக உள்ள பிரச்னைகளுக்குப் புதுமையான முயற்சிகளைக் கண்டறியும் தமிழக பாரம்பரியத்தின் நீட்சியே இது" என்று பாராட்டியுள்ளார். 2014 ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஓ.பன்னீர் செல்வம் முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தார். தமிழக அரசுத் திட்டங்களை உறுதியான ஆய்வு முடிவுகளைக் கொண்டு வரையறுக்கவும், அரசுத் திட்டங்களைக் கண்காணிக்கவும், புள்ளிவிவரங்களை முறையாகப் பயன்படுத்தவும் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் ஜே- பால் அமைப்புடன் தமிழக அரசு இணைந்து செயல்பட்டு வருகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இதற்கானப் பணிகளை மேற்கொண்டார் என கூறப்படுகிறது.

தமிழகத்தில் ஆய்வு

தமிழகத்தில் உள்ள மூத்த குடிமக்களின் வாழ்க்கைத் தரம், பொருளாதார நிலை ஆகியவை குறித்து எஸ்தர் டூஃப்ளோ அபிஜித் பேனர்ஜித் தம்பதி விரிவான ஆய்வு மேற்கொண்டனர். தமிழகத்தில் உள்ள அரோக்கியம் மற்றும் குடும்ப நலன், சமூக நலத்துறை மற்றும் சத்துணவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஜே- பால் சார்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள ஒன்பது அரசுத்துறை அதிகாரிகளுடன் ஜே- பால் அமைப்பைச் சேர்ந்த 15 பொருளாதார அறிஞர்களும் இணைந்து இங்குள்ள பிரச்னைகள், தற்போது நடைமுறையில் உள்ள மக்கள் நலத்திட்டங்கள், அவற்றின் தாக்கங்கள், வெளிநாடுகளில் செய்யப்படும் ஆய்வுகளை தமிழகத்தின் தேவைக்கு ஏற்ப சோதனை முறையில் நடைமுறைப்படுத்துவது ஆகியவை குறித்து விரிவாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

இதுவே ஜே- பால் (அப்தூல் லத்தீஃப் ஜமீல்- பாவர்ட்டி ஆக்ஷன் லேப் ) அமைப்பு உலகில் உள்ள பிராந்திய அரசுடன் செய்துகொண்ட மிக முக்கிய ஒப்பந்தம். தற்போது இந்த நடைமுறையைப் பின்பற்றி உலகெங்கிலும் உள்ள மாகாண அரசுகளுடன் இணைந்து இந்த அமைப்பு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில நோபல் பரிசு பெற்ற அபிஜித் பேனர்ஜி மற்றும் எஸ்தர் டூஃப்ளோவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். Conclusion:I have attached Photo of Esther Duflo and Abhijit Banerji meeting then Tamil Nadu CM OPS
Last Updated : Oct 16, 2019, 2:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.