ETV Bharat / city

அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க முடியாது: தமிழ்நாடு அரசு

சென்னை: அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க முடியாது என தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அத்தி
author img

By

Published : Aug 14, 2019, 3:10 PM IST

40 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசனம் கடந்த மாதத்திலிருந்து நடைபெற்றுவருகிறது. இந்த தரிசனம் வரும் 16ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், அத்திவரதர் தரிசனத்தை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்கக் கோரி சர்வதேச ஸ்ரீவைஷ்ணவ ராமானுஜ சாம்ராஜ்ய சபா தலைவர் சுவாமி கோவிந்த ராமானுஜ தாசர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இந்து சமய அறநிலையத்துறை சார்பாக ஆஜரான வழக்கறிஞர், தரிசனத்தை நீட்டிக்கப் போவதில்லை என அறநிலையத் துறை அமைச்சரே அறிவித்துள்ளதாக கூறினார்.

இதனையடுத்து, அனந்தசரஸ் குளத்தை சுத்தப்படுத்துவது தொடர்பான வழக்கில் தரிசனத்தை நீட்டிக்கக் கோரிய வழக்கை ஏற்கமுடியாது என கூறி மனுதாரருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப் போவதாக நீதிபதி எச்சரிக்கை விடுத்தார். மேலும், தரிசன காலத்தை நீட்டிப்பது குறித்து தமிழ்நாடு அரசுதான் முடிவு செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்தார். அதுமட்டுமின்றி, தரிசனத்தை நீட்டிக்கக் கோரி பொது நல வழக்காகத்தான் தாக்கல் செய்ய முடியும் எனவும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

Intro:Body:

Breaking 

அத்திவரதர் தரிசனத்தை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்க கோரி சர்வதேச ஸ்ரீவைஷ்ணவ ராமானுஜ சாம்ராஜ்ய சபா தலைவர் சுவாமி கோவிந்த ராமானுஜ தாசர் வழக்கு.

அத்திவரதர் தரிசனத்தை 10 நாட்கள் நீட்டிக்கப் போவதாக முதல்வர் அறிவித்துள்ளதாக மனுதாரர் தரப்பில் தகவல்.

தரிசனத்தை நீட்டிக்கப் போவதில்லை என அறநிலைய துறை அமைச்சரே அறிவித்துள்ளதாக அரசுத்தரப்பில் திட்டவட்டம்.

அனந்தசரஸ் குளத்தை சுத்தப்படுத்துவது தொடர்பான வழக்கில் தரிசனத்தை நீட்டிக்க கோரிய வழக்கை ஏற்கமுடியாது என கூறி மனுதாரருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப் போவதாக நீதிபதி எச்சரிக்கை.

தரிசனத்தை நீட்டிக்க கோரி பொது நல வழக்காக தான் தாக்கல் செய்ய முடியும் என நீதிபதி கருத்து

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.