ETV Bharat / city

ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடையில்லை: உயர் நீதிமன்றம் அதிரடி

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்துவரும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

aru
author img

By

Published : Feb 11, 2019, 3:40 PM IST

உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அதனையடுத்து அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் தமிழக அரசால் அமைக்கப்பட்டது.

இந்த விசாரணை ஆணையம், அமைச்சர்கள், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், அரசு அதிகாரிகள், முன்னாள் தலைமைச் செயலர்கள், அப்போலோ மருத்துவமனையின் செவிலியர்கள், மருத்துவர்கள் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்திவருகிறது.

இந்நிலையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும் என அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

  • மருத்துவமனை நிர்வாகம் தாக்கல் செய்திருக்கும் மனுவில், தங்கள் மருத்துவர்களை விசாரிக்க 21 மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்க உத்தரவிட வேண்டும்,
  • ஜெயலலிதா சிகிச்சை விஷயங்கள் குறித்து விசாரிக்க தமிழக அரசு சாராத மருத்துவர்களை கொண்ட குழுவை அமைக்க வேண்டும்.
  • அதுவரையில் ஜெயலலிதா சிகிச்சைகள் குறித்து விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தது.

இந்த வழக்கானது, நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போலோ தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், ஆறுமுகசாமி ஆணையம் மருத்துவ சிகிச்சைகள் தொடர்பாக விசாரிக்காமல், மருத்துவர்களிடம் சாட்சிகள் குறித்து விசாரணை செய்கிறது.

அதற்கு ஆணையத்திற்கு உரிமை இல்லை. ஆணையத்தின் விசாரணை என்பது மருத்துவ ஆவணங்களை சேகரிப்பது மட்டுமே, விசாரணை நடத்துவது அல்ல என வாதம் செய்தார். மேலும், அரசு மருத்துவர்கள் சாட்சியம் அளிக்கும்போது, அவர்களை குறுக்கு விசாரணை செய்ய எங்கள் மருத்துவமனை தரப்புக்கு வாய்ப்பு கொடுக்கப்படுவது இல்லை. எனவே, மருத்துவ விவரங்கள் புரிந்து கொள்ள முடியாததால், 21 துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைக்கும்படி கடந்த டிசம்பர் மாதம் எங்கள் மருத்துவமனை நிர்வாகம் கோரிக்கை விடுத்தது. அந்த கோரிக்கையையும் ஆணையம் நிராகரித்து விட்டது.

undefined

எனவே, இந்த ஆணையம் தொடர்ந்து விசாரணை நடத்தினால், மருத்துவமனையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும். அதனால், ஜெயலலிதாவின் சாவு குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யவேண்டும் எனவும் அவர் வாதிட்டார். இதையடுத்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக மருத்துவர்களிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்த தடை விதிக்க முடியாது என உத்தரவிட்டதோடு வரும் 15-ம் தேதிக்குள் ஆறுமுகசாமி ஆணையம், சசிகலா, தமிழக அரசு இதுகுறித்து பதிலளிக்க வேண்டும் என கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.

Intro:Body:

Body

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.