ETV Bharat / city

நிவர் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் - முதலமைச்சர்! - நிவர் புயல்

முதலமைச்சர்
முதலமைச்சர்
author img

By

Published : Nov 27, 2020, 8:11 PM IST

Updated : Nov 27, 2020, 9:10 PM IST

20:07 November 27

நிவர் புயலால் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ரூ.10 லட்சம் நிவாரணம்: 

"நிவர் புயல் காரணமாக உயிர் சேதத்தைத் தடுக்க, தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது. இருப்பினும், 'நிவர்" புயல் மற்றும் கனமழை காரணமாக 4 பேர் உயிரிழந்தனர். அதற்கு வருத்தமடைகிறேன். 

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களுக்கு ரூ.4 லட்சம் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும், ரூ.6 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்தும் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

கால்நடைகளுக்கு நிவாரணம்: 

இந்தப் புயலின்போது 61 மாடுகளும், 5 எருதுகளும், 55 கன்றுகளும், 114 ஆடுகளும் உயிரிழந்துள்ளன. உயிரிழந்த மாடு ஒன்றுக்கு 30,000 ரூபாயும், எருது ஒன்றுக்கு 25,000 ரூபாயும், கன்று ஒன்றுக்கு ரூ.15,000 ரூபாயும், ஆடு ஒன்றுக்கு 2,000 ரூபாயும் வழங்கப்படும். 

மேலும், 302 குடிசை வீடுகள் முழுமையாகவும், 1,439 குடிசை வீடுகள் பாதியாகவும் சேதமடைந்துள்ளன. அத்துடன் 38 ஓட்டு வீடுகள் முழுமையாகவும், 11 ஓட்டு வீடுகள் பாதியாகவும் சேதமடைந்துள்ளன. சேதமடைந்துள்ள வீடுகளுக்கு உரிய நிவாரண உதவி வழங்கப்படும்.

2,064 மரங்கள் வேரோடு சாய்ந்தன:

அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை,
ராணிப்பேட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட
18 மாவட்டங்களில் 2,064 மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. 

சாலையில் விழுந்துள்ள மரங்கள் போர்க்கால அடிப்படையில் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்பட்டு விட்டது.

மின் மாற்றிகள் சேதங்கள்:

பல்வேறு மாவட்டங்களில் 108 மின் மாற்றிகள் (Transformers) சேதமடைந்துள்ளன. 2,927 மின் கம்பங்கள் விழுந்துள்ளன. அவற்றை சீர் செய்யும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

மருத்துவ முகாம்கள்: 

புயல் காரணமாக மக்களுக்கு எந்தவித தொற்று நோயும் ஏற்படாமல் பாதுகாக்கும் வண்ணம் 1,220 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 275 நடமாடும் மருத்துவ முகாம்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 85,331 நபர்கள் இம்மருத்துவ முகாம்கள் மூலம் பயன் பெற்றுள்ளனர். 

குடியிருப்புகள் பாதிப்பு:

வேளச்சேரி, முடிச்சூர், வரதராஜபுரம், தாம்பரம் ஆகிய பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி, குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதை கருத்தில் கொண்டு, அப்பகுதிகளில் நிரந்தர தீர்வு காண உரிய திட்டங்களை வகுக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பயிர் சேதாரக் கணக்கீடு: 

நிவர் புயலால் ஏற்பட்ட பயிர் சேதாரத்தை முறையாக கணக்கீடு செய்து, பேரிடர் நிவாரண நிதியிலிருந்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும், இது தவிர பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையும்
பெற்றுத் தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படிங்க: நிவர் புயல் பாதிப்பு: கடலூரில் முதலமைச்சர் பழனிசாமி நேரில் ஆய்வு!

Last Updated : Nov 27, 2020, 9:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.