நிவர் புயலானது இன்று (நவ. 25) கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் அவசர உதவிக்காக காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ள 94981 81239 என்ற எண்ணை சென்னை காவல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
மரம் விழுந்து போக்குவரத்து இடையூறு, மின்கம்பி அறுந்து விழுதல், மழை காரணமாக மின்சார பழுதுகள் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் உதவி எண்ணுக்கு வரும் அழைப்புகளுக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் தொலைபேசி அழைப்பு மூலமாகவும், குறுஞ்செய்தி மற்றும் வாட்ஸ் ஆப் மூலமாகவும் இந்த எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிவர் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை உள்பட பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிங்க: நிவர் புயல் இன்று இரவு கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்