ETV Bharat / city

சிங்கத்தையும் சீண்டிப் பார்த்த கரோனா! - சிங்கத்திற்கு கரோனா

வண்டலூர் உயிரியல் பூங்கா
வண்டலூர் உயிரியல் பூங்கா
author img

By

Published : Jun 4, 2021, 4:14 PM IST

Updated : Jun 4, 2021, 7:27 PM IST

16:05 June 04

சென்னை: வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள 9 சிங்கங்ளுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், ஒரு சிங்கம் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து அரசு தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், "அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிலுள்ள சிங்க உலாவிட இருப்பிடத்திலிருந்த 5 சிங்கங்கள், மே 26 அன்று உணவு சரியாக உண்ணவில்லை என்றும், தொடர் இருமல் இருப்பதாகவும் தகவல் பெறப்பட்டது. இத்தகவலறிந்து பூங்காவின் வனவிலங்கு மருத்துவர்கள் உடனடியாக சென்று உரிய முறைப்படி ஆய்வு மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர். 

மேலும், பூங்காவின் நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று, மேற்படி சிகிச்கைக்காக மருத்துவ நிபுணர்கள் அடங்கிய ஒரு குழுவை, தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் அனுப்பி வைத்தது.

இந்நிலையில், 11 சிங்கங்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, தமிழ்நாடு கால்நடை பல்கலைகழகத்திற்கும், மூக்கு மற்றும் மலவாயிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு போபால், மத்தியபிரதேசத்தில் உள்ள ஆய்வு கூடங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

பூங்காவில் சிங்க உலாவிட விலங்கு இருப்பிடம் 2இல் இருந்த 9 வயதான நீலா எனும் பெண் சிங்கம் ஜூன் 3ஆம் தேதி மாலை 6.15 மணிக்கு இறந்துவிட்டது. இப்பெண் சிங்கத்திற்கு முதல் நாளிலிருந்தே சில திரவங்கள் மூக்கிலிருந்து சுரந்து கொண்டிருந்தது. அதற்கு உடனடியாக சிகிச்சை தரப்பட்டது.

ஆய்வக அறிக்கையின்படி, அனுப்பப்பட்ட 11 சிங்கங்களின் மாதிரிகளில் 9 சிங்கங்களுக்கு கரோனா தொற்று இருப்பதாக தெரியவந்துள்ளது. அந்த அறிக்கைகள் தவறானதா இல்லை சரியானதா என அறிய இன்று இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம், பெய்ரெய்லி மற்றும் ஹைதராபாத்திலுள்ள மூலக்கூறு மற்றும் மூலக்கூறு உயிரியலுக்கான மையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பூனையினங்கள், நாயினங்கள், புனுகுப் பூனையினங்கள் மற்றும் வாலில்லா குரங்கினங்களுக்கு தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகம் மற்றும் ஹைதராபாத் உயிரியல் பூங்கா கால்நடை மருத்துவர்கள் மற்றும் புரோனக்ஸ் உயிரியல் பூங்கா கால்நடை மருத்துவர்களின் அறிவுரைப்படி நோய் தடுப்பு முன்னெச்சரிச்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த விலங்குகூடங்களில் பணிபுரியும் அனைத்து விலங்கு காப்பாளர்களுக்கும், கரோனா தொற்று நோய்கான தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு பாதுகாப்பு உடைகள் அளிக்கப்பட்டுள்ளன. கால்நடை மருத்துவர்கள் மற்றும் களப்பணியாளர்கள் பூங்காவில் உள்ள விலங்குகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Jun 4, 2021, 7:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.