சென்னை: மலைச்சரிவு காரணமாக நீலகிரி மலை ரயில் நேற்று உதகமண்டலத்திலிருந்து ஹில்கிரோவ் வரை மட்டுமே இயக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று (ஜன.10) மேட்டுப்பாளையத்திலிருந்து உதகமண்டலம் மற்றும் உதகமண்டலத்திலிருந்து மேட்டுப்பாளையம் ஆகிய ரயில் சேவைகளும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இருந்த போதிலும், குன்னூர் உதக மண்டலம் சேவை திட்டமிட்டபடி இயக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: சிறப்பு விமானத்தில் கடத்த முயன்ற ஹவாலா பணம் பறிமுதல்: 6 பேர் கைது