ETV Bharat / city

சென்னை ஐஎஸ் பயங்கரவாதி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! - ஐஎஸ்

சென்னை ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் மீது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அலுவலர்கள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

NIA Charge-sheets An ISIS Terrorist in Chennai ISIS / 'Q' Branch case  NIA  Charge-sheets  ISIS  என்ஐஏ  சையது அலி  ஐஎஸ்  குற்றப்பத்திரிகை

author img

By

Published : Jun 15, 2021, 8:28 PM IST

சென்னை: பூந்தமல்லி என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதியாக சந்தேகிக்கப்படும் சையது அலி (31) மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

கேரள மாநிலத்தை சேர்ந்த இவர் மீது பல்வேறு சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக 2019 டிசம்பர் 28ஆம் தேதி சேலம் மற்றும் சென்னையில் போலியாக சிம் கார்டுகள் வாங்கி அதை பயங்கரவாதிகள் பணம் சேகரித்தல் உள்ளிட்ட சட்டவிரோத பணிகளுக்காக பயன்படுத்தியுள்ளனர்.

இந்த வழக்கில் லியாகத் அலி மற்றும் காஜா மொய்தீன் ஆகியோர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சையது அலி மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவர் தென்னிந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தை தொடங்க பல்வேறு சதித் திட்டங்கள் தீட்டியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.