ETV Bharat / city

48 மணி நேரத்தில் அடுத்த புயல்!

சென்னை: அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

warning
warning
author img

By

Published : Nov 27, 2020, 2:12 PM IST

Updated : Nov 27, 2020, 2:31 PM IST

நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன், ” தமிழகத்தில் கரையை கடந்த நிவர் புயல் தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுக்குறைந்து, தெற்கு ஆந்திராவின் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உள்ளது.

இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் வட தமிழகத்தில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சோளிங்கரில் 23 செமீ மழை பதிவாகியுள்ளது. அடுத்த இரு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

தற்போதைய நிலவரப்படி, அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும். இது எதிர்வரும் 30 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் டிசம்பர் 1 முதல் 3 ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்யும்.

48 மணி நேரத்தில் அடுத்த புயல்!

இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இதனால் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடனும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

நவம்பர் 27 முதல் டிசம்பர் 1 வரை வடக்கு கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல், ஆந்திரா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா கடலோரப் பகுதிகள், அந்தமான் நிக்கோபார் தீவுகள், தென்மேற்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய தமிழ்நாடு கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில், சராசரியாக சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும், இடையிடையே 65 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம் “ என்றார்.

இதையும் படிங்க: தொடர் மழை: சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல தடை!

Last Updated : Nov 27, 2020, 2:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.