11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: சபாநாயகர் இன்று விசாரணை
சென்னை: துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் பாண்டியராஜன் உள்ளிட்ட அதிமுகவைச் சேர்ந்த 11 சட்டப்பேரவை உறுப்பினர்களின் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்ற அறிவுரைப்படி, இன்று (ஆகஸ்ட் 27) சபாநாயகர் தனபால் விசாரிக்கிறார்.
தமிழ்நாட்டில் நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழ்நாட்டில் ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று கூடுகிறது
2017ஆம் ஆண்டு ஜூலையில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கூடுகிறது.