காங்கிரஸ் செயற்குழு கூட்டம்:
பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் காணொலி வாயிலாக இன்று (ஆகஸ்ட் 24) கூடுகிறது.
பதினோறாம் வகுப்பு மாணவர் சேர்க்கை:
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் பதினோறாம் வகுப்பு மாணவர் சேர்க்கை இன்று (ஆகஸ்ட் 24) முதல் துவங்குகிறது.
மாட்டுத்தாவணி மலர் சந்தை:
கரோனா பரவல் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக மூடப்பட்டிருந்த மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தை இன்று முதல் இயங்கவுள்ளது.
கேரள அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்:
கேரள சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (ஆகஸ்ட் 24) துவங்குகிறது. அம்மாநிலத்தில் தங்கக் கடத்தல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ளன.
சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் முன்பதிவு:
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் மாதத்துக்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 11 மணி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இங்கிலாந்து - பாகிஸ்தான் கடைசி டெஸ்ட்:
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே சவுதம்டனில் நடைபெற்று வரும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் கடைசி நாள் ஆட்டம் இன்று (ஆகஸ்ட் 24) தொடங்குகிறது.