ETV Bharat / city

புத்தாண்டையொட்டி மது விற்பனை - கடும் வீழ்ச்சி - New Year Celebrations 2021

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று (டிச. 31) மட்டும் ரூபாய் 159 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது. 2019 ஆண்டைக் காட்டிலும் மது விற்பனை பாதியாகக் குறைந்துள்ளது.

மது விற்பனை
மது விற்பனை
author img

By

Published : Jan 1, 2021, 3:49 PM IST

Updated : Jan 1, 2021, 4:21 PM IST

தமிழ்நாட்டில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு நேற்று (டிச. 31) மட்டும், டாஸ்மாக் கடைகளில் ரூபாய் 159 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ரூ.48.75 கோடி, மதுரையில் ரூ.27.30 கோடி திருச்சியில் ரூ.28.10 கோடி, கோவையில் ரூ.28.40 கோடி, சேலத்தில் ரூ.26.49 கோடி மது விற்பனை ஆகியுள்ளது.

தமிழ்நாட்டில் டாஸ்மாக்கில் சராசரியாக, வார நாள்களில் ரூ.70-75 கோடி மதிப்புள்ள மதுபானங்கள் விற்பனையாகின்றன. வார இறுதி நாள்களில் வசூல் ரூ.90 கோடி வரை விற்பனை அதிகரிக்கும். தீபாவளி, புத்தாண்டு உள்ளிட்ட முக்கிய பண்டிகை காலங்களில், விற்பனை புள்ளி விவரங்கள் பொதுவாக ரூ.100 கோடியைக் கடக்கும் எனக் கூறப்படுகிறது.

மேலும் தமிழ்நாட்டில் ஐந்தாயிரத்து 152 மதுபான சில்லறை விற்பனை கடைகள், 1,872 பார்கள் உள்ளன. 2018-19ஆம் ஆண்டில் டாஸ்மாக் மூலம் அரசு ரூ.31,157 கோடி வருமானத்தை ஈட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நேற்று (டிச. 31) காலையில் இருந்து தமிழ்நாட்டில் மது விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று உள்ளது. நேற்று மட்டும் 159 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது.

கடந்த 2019 டிசம்பர் மாதம் 31ஆம் தேதி 181.90 கோடி ரூபாய்க்கும், 2020 ஜனவரி 1 அன்று 133.50 கோடி ரூபாய்க்கும் மது விற்பனையாகியுள்ளது. மொத்தமாக புத்தாண்டு பண்டிகையையொட்டி கடந்த ஆண்டு 2019இல் ரூ.315 கோடியே 40 லட்சத்துக்கு மது விற்பனை ஆகி இருக்கிறது.

2018 ஆம் ஆண்டில், டாஸ்மாக் மதுபான விற்பனை டிசம்பர் 31 அன்று 130 கோடி ரூபாயைத் தொட்டது. டிசம்பர் 30 ஆம் தேதி, விற்பனை எண்ணிக்கை ரூ. 113 கோடியாக இருந்தது.

கடந்த ஆண்டு டிசம்பர் 30 மற்றும் டிசம்பர் 31ஆம் தேதி வருமானம் ரூ. 242 கோடியாக இருந்தது. 2018 ஆம் ஆண்டில் ரூ.243 கோடியாக இருந்தது. அதற்கு ஒரு வருடம் முன்பு, 2017இல் வருவாய் ரூ. 230.52 கோடியாக இருந்தது.

இதையும் படிங்க: குடியிருப்புகள் கட்டும் திட்டப் பணிகள் - அடிக்கல் நாட்டிய பிரதமர்!

Last Updated : Jan 1, 2021, 4:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.