சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளை இனி கட்சியின் அடிப்படை உறுப்பினர்களே தேர்வு செய்வார்கள் என அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கட்சியின் அடிப்படைச் சட்ட விதிகளை தளர்த்தவும், விலக்கு அளிக்கவும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு முழு அதிகாரம் இருப்பதாக புதிய சட்ட விதி இயற்றப்பட்டுள்ளது.
![resolutions in admk executive committee meeting](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13784206_che.jpg)
முக்கியத் தீர்மானங்கள்
இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவற்றப்பட்டன. அதன்படி, மழை வெள்ள நிவாரண உதவிகளை விரைந்து முடிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
![resolutions in admk executive committee meeting](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13784206_admk.jpg)
கூடுதலாக நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை மக்கள் மத்தியில் பரப்பியதாகக் கூறி திமுக-விற்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டுமெனவும், தேர்தலில் திமுக முறைகேடுகளைத் தடுக்க தேவையான முன்னேற்பாடுகளை செய்திட வேண்டும் என்பது உள்பட 11 தீர்மானங்கள் அதிமுக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: அதிமுக தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம்