ETV Bharat / city

பொது சீராய்வின்படி நிர்ணயிக்கப்பட்ட சொத்துவரியினை உரிமையாளர்கள் செலுத்த சென்னை மாநகராட்சி உத்தரவு

சொத்துவரி பொது சீராய்வின்படி நிர்ணயிக்கப்பட்ட சொத்துவரியினை உரிமையாளர்கள் செலுத்த சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

புதிய சொத்து வரியை செலுத்த வேண்டும் - மாநகராட்சி வேண்டுகோள்

author img

By

Published : Jul 2, 2022, 7:29 PM IST

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு உயர்த்திய புதிய சொத்து வரியை சொத்து உரிமையாளர்கள் இணையதளம் மூலம் செலுத்தலாம் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், "பெருநகர சென்னை மாநகராட்சியின் முந்தைய சென்னை மாநகராட்சி/இணைக்கப்பட்ட உள்ளாட்சி பகுதிகளுக்கென பரிந்துரைப்பட்டுள்ள உயர்வு காரணிகளின் அடிப்படையில் சொத்துவரி பொது சீராய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இணைக்கப்பட்ட உள்ளாட்சி பகுதிகளுக்கென பரிந்துரைக்கப்பட்டுள்ள உயர்வு காரணிகளின் அடிப்படையில் சொத்துவரி பொது சீராய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இணைக்கப்பட்ட உள்ளாட்சி பகுதிகளில், ஏற்கனவே சொத்துவரி உயர்வாக உள்ள பகுதிகள் என கண்டறியப்பட்டவைகளுக்கு, அவற்றிற்கு அருகாமையில் உள்ள முந்தைய மாநகராட்சி பகுதிகளைவிட, சொத்துவரி அடிப்படை தெரு கட்டணம் அதிகமாக இல்லாதவாறு நிர்ணயம் செய்ய, அனுமதி பெறப்பட்டு சொத்துவரி சீராய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள சொத்துவரி மதிப்பீடுகளுக்கு மேற்குறிப்பிட்டவாறு சொத்துவரி சீராய்வு மேற்கொள்ளப்பட்டு, பொதுசீராய்வு அறிவிப்புகள் தபால்துறை மூலமாக சொத்து உரிமையாளர்களின் முகவரிக்கு ஜூன் 27ஆம் தேதி வரை ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்களுக்கு பொது சீராய்வு அறிவிப்புகள் அனுப்பப்பட்டன.

சொத்துவரி பொது சீராய்வு அறிவிப்புகளில், முந்தைய சொத்துவரி மற்றும் பொது சீராய்வின்படி நிர்ணயம் செய்யப்பட்டுள்ள சொத்துவரி ஆகிய விவரங்கள் ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது. தற்போது, பொது சீராய்வின்படி சொத்துக்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள சொத்துவரியினை சொத்து உரிமையாளர்கள் எளிதாக செலுத்தும் வகையில், சீராய்வு அறிவிப்புகளில் tiny.url மற்றும் QR Code ஆகிய வழிமுறைகள் மற்றும் வசதிகள் மாநகராட்சி சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வருவாய் அலுவலர், சென்னை மாநகராட்சி அவர்களின் பெயரில் காசோலைகள் மற்றும் வரைவோலைகள், கடன்/ பற்று அட்டை மூலமாக, பெருநகர சென்னை மாநகராட்சியின் வரி வசூலிப்பவர்களிடம் செலுத்தி, செலுத்தப்பட்டதற்கான வரிசீட்டினை (Receipt) பெற்றுக் கொள்ளலாம்.

சென்னை மாநகராட்சியின் வலைத்தளம் (www.chennaicorporation.gov.in) மூலமாக எவ்வித பரிமாற்ற கட்டணமில்லாமல் (Nil Transaction fee) சொத்துவரி செலுத்தலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் மூலம் நேரடியாக பணமாகவும் சொத்துவரி செலுத்தலாம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் தமிழர் அல்லாதவர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால் அரசு உடனே விழித்துக்கொள்ள வேண்டும்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.