சென்னை தலைமைச் செயலகம், ஆளுநர் மாளிகை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணிகளில் 325 போலீசார் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் கட்டாயம் 'சபாரி' எனப்படும் புதிய சீருடை அணிய வேண்டும் என்று ஆணையிட்டதன் அடிப்படையில், ஆண் காவலர்களைப் போல பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள 87 பெண் காவலர்களுக்கும் சபாரி சீருடை வழங்கப்பட்டுள்ளது. இது அசெளகரியமாக உள்ளதாக பெண் காவலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பொதுவாக பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் பெண் காவலர்கள், வழக்கமான காக்கி சீருடை மற்றும் சீருடை அல்லாத கலர் உடையில் பணியில் ஈடுபடுவர். தற்போது பெண் காவலர்களுக்கு சென்னை பாதுகாப்பு பிரிவில் வழங்கப்பட்ட சபாரி சீருடை, பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பெண்களுக்கும் வயதான பெண் காவலர்களுக்கும் அசௌகரியமாக உள்ளதால் முன்பு இருந்ததைப்போல், ஆடை அணிய அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், தேவையான நேரங்களில் காக்கி உடை அணிவதோடு, மற்ற நேரங்களில் சாதாரண உடையில் பணிபுரிய அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் கேட்கும்போது, பாதுகாப்பு பணியில் ஆண் பெண் இருவருக்கும் வேறுபாடு இல்லாமல் சீருடை அணிய வேண்டும் என்ற அடிப்படையில் பெண் காவலர்கள் சீருடை மாற்றப்பட்டதாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஆளுநர் ரவி, பதவியில் இருந்து விலகி முழுநேர ஆர்எஸ்எஸ் தொண்டராக பணியாற்றுவது தான் பொருத்தமானது - திருமாவளவன்