ETV Bharat / city

மாணவர்களிடையே ஏஒய்.4.2வகை கரோனா... அனைத்து பள்ளிகளையும் மூட உத்தரவு... - மாணவர்களிடையே புதிய கரோனா

மாணவர்களிடையே கரோனா தொற்று பரவல் அதிகரித்துவருவதால், பள்ளிகளை மூட மாநில அரசுகள் திட்டமிட்டுவருகின்றன.

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்
author img

By

Published : Nov 1, 2021, 3:21 PM IST

Updated : Nov 17, 2021, 5:17 PM IST

நாடு முழுவதும் கரோனா தொற்றின் 2ஆம் அலை குறைந்துவரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதனிடையே மாணவர்களிடையே கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துவருகிறது.

அந்த வகையில், இமாச்சல பிரதேச மாநிலத்தில் செப்டம்பர் 27ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. ஒரு மாதம் முடிந்த நிலையில், காங்ரா மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 426 மாணவர்கள், 49 பணியாளர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், அக்டோபர் 31ஆம் முதல் பள்ளிகள் தொடர்ந்து மூடப்படும் என மாவட்டக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே மத்திய பிரதேச மாநிலத்தில் உருமாற்றமடைந்த ஏஒய்.4.2(AY.4.2) என்ற கரோனா வைரஸ் பரவியுள்ளது.

இதையடுத்து மகாராஷ்டிராவிலும், பெங்களூருவிலும் இந்த வைரஸ் பரவியுள்ளது. ஏஒய்.4.2 வைரஸ், கரோனாவைவிட 6 மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

இதனை கருத்தில் கொண்டு, பள்ளிகள் திறப்பில் மாநில அரசுகள் மறுபரிசீலனையில் ஈடுபடலாம் என்று கூறப்படுகின்றன. அதன்படி தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடலாம் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ரஷ்யாவில் அதிகரிக்கும் கரோனா உயிரிழப்பு - மீண்டும் ஊரடங்கு

Last Updated : Nov 17, 2021, 5:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.