சென்னை: தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (TAHDCO) 1974ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த கருணாநிதியால், ஆதி திராவிடர்களின் மேம்பாட்டிற்காக தொடங்கப்பட்டு, தொடர்ந்து இயங்கி வருகிறது.
இக்கழகத்தின் கட்டுமானப் பிரிவினால் வீடற்ற ஆதிதிராவிடர்களுக்குத் தீப்பிடிக்காத வீடுகள், பள்ளி விடுதிகள் மற்றும் சமுதாயக் கூடங்கள் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளையும்,
மேம்பாட்டுப் பிரிவால் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் தேவைக்கேற்ப பல்வேறு பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தற்போது தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக உ.மதிவாணன் நியமிக்கப்பட்டுள்ளார். உ.மதிவாணன் பி.ஏ.பி.எல் பட்டம் பெற்ற வழக்கறிஞர் ஆவார்.
1996 முதல் 2001 வரை திருவாரூர் ஊராட்சி ஒன்றியத் தலைவராகவும், 2006 முதல் 2011 வரை திருவாரூர் சட்டப்பேரவை உறுப்பினராகவும் மற்றும் தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சராகவும் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் முதலமைச்சர் ஆய்வு