ETV Bharat / city

ஓய்வுபெற்ற நீதிபதியின் வீட்டில் கொள்ளை: நேபாளம் கொள்ளையர்கள் கைது - ஓய்வுபெற்ற நீதிபதியின் வீட்டில் கொள்ளை

ஓய்வுபெற்ற நீதிபதியின் வீட்டில் மூன்று நாள்கள் தங்கி கொள்ளையடித்து சென்ற நேபாளம் நாட்டைச் சேர்ந்த 4 கொள்ளையர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

நேபாள கொள்ளையர்கள் கைது
நேபாள கொள்ளையர்கள் கைது
author img

By

Published : Apr 6, 2022, 10:39 AM IST

சென்னை: பூந்தமல்லி சன்னதி தெருவைச் சேர்ந்தவர் ஞானப்பிரகாசம் (79). இவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார். இவருக்கு அண்ணா நகரில் ஒரு வீடு உள்ளது. அந்த வீட்டை ஞானப்பிரகாசம் அடிக்கடி வந்து பார்த்து விட்டு செல்வார்.

அதே போல் கடந்த 29 ஆம் தேதி ஞானபிரகாசம் அண்ணாநகர் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் வீட்டினுள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு 5 லட்சம் மதிப்புள்ள நகை, 5 லட்சம் பணம் கொள்ளை போனது தெரியவந்தது. இது குறித்து ஞானப்பிரகாசம் அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து அண்ணாநகர் காவல் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையிலான தனிப்படையினர் கொள்ளைச் சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கினர். அங்கிருந்த சிசிடிவி கேமராவில் சைக்கிளில் ஒருவர் தொடர்ந்து மூன்று நாள்கள் வந்து சென்றது தெரியவந்தது.

நேபாள கொள்ளையர்கள் கைது

பின்னர் அப்பகுதியில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராகள் காட்சிகளையும் காவல்துறையினர் சோதனை செய்தனர். கடைசியாக அந்த சைக்கிள் செனாய் நகரில் உள்ள ஒரு வீட்டில் நின்றதை கண்டுபிடித்தனர். அங்கிருந்த நேபாளத்தைச் சேர்ந்த பூபேந்தர் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்டது நேபாளத்தைச் சேர்ந்த கும்பல் என்பது தெரியவந்தது. இதனையடுத்து நேபாளத்தை சேர்ந்த லால், கணேசன், பட்ராய் உள்ளிட்டோரை காவல் துறையினர் தேட ஆரம்பித்தனர். கொள்ளையர்களின் செல்போன் சிக்னல்கள் பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களை காட்டியது.

தொடர்ந்து, பெங்களூரில் கணேசன், பட்ராய் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். லால் என்பவர் சென்னையில் கைது செய்யப்பட்டார். லால் ஷெனாய் நகர் பகுதியில் உள்ள காலி மனையில் காவலாளியாக இருந்து வந்துள்ளார். இவர் சைக்கிளில் செல்லும்போது பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு வந்துள்ளார்.

அந்த அடிப்படையில் தான் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஞானப்பிரகாசம் வீடானது கடந்த 5 மாதங்களாக பூட்டியிருப்பது கொள்ளை கும்பலுக்கு தெரியவந்துள்ளது. கடந்த மார்ச் 22ஆம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதி வீட்டில் சென்று மது அருந்தி சாப்பிட்டு கொள்ளைக் கும்பல் தங்கியுள்ளது. இரண்டாவது நாளில் கடப்பாரை கொண்டு வீட்டை உடைத்து தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

எனினும் யாரும் புகார் அளிக்காததால், மூன்றாவது நாள் வீட்டில் உள்ள வெள்ளிப் பாத்திரங்கள் உள்ளிட்ட மற்ற பொருள்களை பொறுமையாக கொள்ளை அடித்து சென்றுள்ளனர். வீட்டில் கொள்ளை நிகழ்ந்தது 29 ஆம் தேதிதான் ஓய்வுபெற்ற நீதிபதி ஞானப்பிரகாசத்திற்கு தெரியவந்துள்ளது.

இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சில நேபாளம் நாட்டினரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர். பிடிபட்ட கொள்ளையர்களிடம் இருந்து பணம், நகை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் குறித்து நேபாளம் தூதரக அதிகாரிகளிடம் சென்னை காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

5 நாள்களில் கொள்ளை கும்பலை கைது செய்த காவல் துறையினருக்கு உயரதிகாரிகள் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கைது செய்யப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: சென்னை ஏடிஎம் எந்திரங்களில் கொள்ளை முயற்சி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.