ETV Bharat / city

அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சிகள்

சென்னை: அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு மார்ச் 25ஆம் தேதி முதல் நீட் தேர்வு பயிற்சிகள் அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

நீட்
author img

By

Published : Mar 17, 2019, 12:28 PM IST

அரசு,அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு 25ஆம் தேதி முதல் சென்னை, திருவள்ளுர், கிருஷ்ணகிரி, கோயம்புத்துார், பொள்ளாச்சி, திருச்செங்கோடு, திருச்சி, தேனி, நாகர்கோவில் ஆகிய எட்டு மையங்களில் தமிழ் வழியிலும்- சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகம், ஈரோடு நந்தா பொறியியல் கல்லுாரி, துாத்துக்குடி என்.இ.இ.பொறியியல் கல்லுாரி ஆகிய மூன்று மையங்களில் ஆங்கில வழியிலும் நீட் பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

நீட் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை 11ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள், நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இந்த கல்வியாண்டில் அவர்களின் செயல்பாட்டின் அடிப்படையில்தலைமை ஆசிரியர்கள் தேர்வு செய்துள்ளனர்.

இந்த பயிற்சி வகுப்பில் சுமார் நான்காயிரம் மாணவர்கள் ஒரு மாதம் தங்கி படிக்கும் வகையில் கழிப்பிட வசதிகள், குளியலறை வசதிகள், பாதுகாப்பான குடிநீர், உணவு வசதிகள் செய்துத் தர திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், பயிற்சி மையங்களில் மாணவர்கள், மாணவிகளுக்கு தனித்தனியாக தங்கும் வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் எனவும், மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் தேவையான முதலுதவி வழங்குவதற்கு ஏதுவாக மருத்துவ வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் எனவும் கூறினார்.

அரசு,  அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு
11 இடங்களில் 25 ந் தேதி முதல்  நீட் தேர்வு பயிற்சி 
 
சென்னை, 
தமிழகத்தில் 11 இடங்களில் மார்ச் 25 ந் தேதி முதல் அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சிகள் அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதவாது, தமிழகத்தில் 32 மாவட்டங்களில் அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களுக்கு வரும் 25 ந் தேதி முதல் நீட் தேர்விற்கான பயிற்சி  11 தனியார் கல்வி நிறுவனங்களில் அளிக்கப்பட உள்ளது.
 மாணவர்களுக்கு ஒரு மாதம் தங்கி படிக்கும் வகையிலும், தேவையான உணவு வசதிகளும் அளிக்கப்பட உள்ளன.  திருவள்ளுர், கிருஷ்ணகிரி, கோயம்புத்துார் மாவட்டத்தில் குனியாமுத்துார், பொள்ளாச்சி,  திருச்செங்கோடு, திருச்சி, தேனி மாவட்டம் போடிநாயக்கனுார், நாகர்கோவில் ஆகிய 8  மையங்களில்  தமிழ் வழியிலும், சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகம், ஈரோடு நந்தா பொறியியல் கல்லுாரி, துாத்துக்குடி என்.இ.இ.பொறியியல் கல்லுாரி ஆகிய 3 மையங்களில்  ஆங்கில வழியிலும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 

நீட் தேர்வினை ஆங்கில வழியில் எழுதுவதற்கு விண்ணப்பம் செய்த 2,353 மாணவர்களில் தற்பொழுது 250 மாணவர்களும், தமிழ் வழியில் எழுதுவதற்கு பதிவு செய்த  1,818 மாணவர்களில் 340 மாணவர்களும்  சிறப்பு பயிற்சி  மையங்களில் தங்கி படிப்பதற்கு விண்ணப்பம் செய்துள்ளனர்.  இந்த பயிற்சி வகுப்பில் சுமார் 4 ஆயிரம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்களின் உண்டு உறைவிடப்பயிற்சியில் 11 மையத்திற்கும் முகாம் அலுவலராக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  

நீட் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை 11 ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள், நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இந்த கல்வியாண்டில் அவர்களின் செயல்பாட்டின் அடிப்படையில்  தலைமை ஆசிரியர்கள் தேர்வு செய்துள்ளனர். இந்த பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களிடம் உண்டு உறைவிடப் பயிற்சிக்கு விருப்ப கடிதத்தினை பெற்று வைத்துள்ளனர். 
இந்த பயிற்சி மையங்களில் மாணவர்கள், மாணவிகளுக்கு தனித்தனியாக தங்கும் வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. கழிப்பிட வசதிகள், குளியலறை வசதிகள், மாணவர்களுக்கு பாதுகாப்பான குடிநீர் மற்றும் உணவு வசதிகள் செய்துத் தரப்பட்டுள்ளன. ஒரு வகுப்பறைக்கு 50 மாணவர்கள் தங்குவதற்கு வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. 
மாணவர்களின் பெற்றோர், பாதுகாவலர் உடன் தங்குவதற்கு அனுமதிக் கிடையாது. மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் தேவையான முதலுதவி வழங்குவதற்கு ஏதுவாக மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 
இந்த பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் தவிர மற்றவர்கள் தற்பொழுது நடந்து வரும் 413  தொடுவானம் பயிற்சி மையத்தில் தொடர்ந்து பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறினார். 

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.