ETV Bharat / city

நோயாளிகளுக்கு போடும் ஊசி உடைந்த விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவு! - health secretary beela rajesh

சென்னை: அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு போடப்பட்ட ஊசி உடைந்த சம்பவங்கள் தொடர்ந்து மூன்று இடங்களில் நடைபெற்றதால் ஊசியின் தரத்தை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பீலா ரஜேஷ் தெரிவித்துள்ளார்.

பீலா ரஜேஷ்
beela_rajesh
author img

By

Published : Nov 28, 2019, 4:43 PM IST

சென்னை எழும்பூரில் உள்ள நல்வாழ்வு மற்றும் குடும்ப நல பயிற்சி நிலையத்தில் 2020 - 21ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் செயல்படுத்த வேண்டிய சுகாதார திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாநில அளவில் இன்றும் நாளையும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தலைமையில் நடைபெறுகிறது.

இந்த கூட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பீலா ராஜேஷ், "சுகாதாரத் துறை திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்றும், நாளையும் நடைபெறும். கூட்டத்தில் தாய் சேய் நலத்திட்டம், தரமான மருத்துவ சேவை, தொற்றுநோய்கள், தொற்றா நோய்களை கட்டுப்படுத்துதல் மற்றும் தடுத்தல் உள்ளிட்ட முக்கியமான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் அனுமதிக்கு அனுப்பிவைக்கப்படும். அதன் அடிப்படையில் மத்திய அரசு திட்டங்களுக்கு அனுமதி வழங்க உள்ளது.

கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்த திட்டங்களில் 95 சதவீத திட்டங்களை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. மீதமுள்ள ஐந்து சதவீதம் துணை அறிக்கையாக அனுப்பி ஒப்புதல் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பீலா ரஜேஷ் பேட்டி

ராமநாதபுரத்தில் நோயாளிக்கு ஊசி போடும் போது ஊசி உடைந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து மூன்று இடங்களில் இது போன்ற பிரச்னை ஏற்பட்டுள்ளதால் ஊசியின் தரம் குறித்தும் ஆய்வு செய்து தமிழ்நாடு மருத்துவ சேவைப் பணிகள் கழகம் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கை ஒரு வாரத்தில் கிடைத்தவுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாட்டில் புதிதாக ஒன்பது மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன. இந்த மருத்துவக் கல்லூரிகளில் 2020 - 21 ஆம் கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும்" என தெரிவித்தார்.

மேலும் படிக்க: உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம்

Intro:நோயாளிகளுக்கு போடும் ஊசி உடைந்த விவகாரம் குறித்து விசாரணை

Body:சென்னை,

அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு போடப்பட்ட ஊசி மூன்று சம்பவங்களில் உடைந்தது குறித்து அதன் தரத்தை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பீலா ரஜேஷ் தெரிவித்தார்.

சென்னை எழும்பூரில் உள்ள நல்வாழ்வு மற்றும் குடும்ப நல பயிற்சி நிலையத்தில் 2020 -21 ஆம் ஆண்டில் தமிழகத்தில் செயல்படுத்த வேண்டிய சுகாதார திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாநில அளவில் இன்றும் நாளையும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தலைமையில் நடைபெறுகிறது.

இந்த கூட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், தமிழகத்தில் 2020 21 ஆம் ஆண்டில் செயல்படுத்த வேண்டிய சுகாதார துறை திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் தாய் சேய் நலத்திட்டம், தரமான மருத்துவ சேவை, தொற்றுநோய்கள், தொற்றா நோய்களை கட்டுப்படுத்துதல் மற்றும் தடுத்தல் உள்ளிட்ட முக்கியமான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் அடிப்படையில் மத்திய அரசு திட்டங்களுக்கு அனுமதி வழங்கும்.

கடந்த ஆண்டு தமிழக அரசு பரிந்துரை செய்த திட்டங்களில் 95 சதவீத திட்டங்களை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. மீதமுள்ள ஐந்து சதவீத திட்டங்களையும் துணை அறிக்கையாக மத்திய அரசுக்கு அனுப்பி ஒப்புதல் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ராமநாதபுரத்தில் நோயாளிக்கு ஊசி போடும் போது ஊசி உடைந்து விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நர்ஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து மூன்று இடங்களில் இது போன்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் ஊசியில் தரம் குறித்து ஆய்வு செய்து தமிழ்நாடு மருத்துவ சேவைப் பணிகள் கழகம் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கை ஒரு வாரத்தில் கிடைத்தவுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழகத்தில் புதிதாக ஒன்பது மருத்துவக்கல்லூரிகள் துவக்கப்பட உள்ளன. இந்த மருத்துவக் கல்லூரிகள் 2020 -21 ஆம் ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.